திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Sunday, October 3, 2010

திருவண்ணாமலை மீது நெஞ்சு விடுதூது

திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது


நெஞ்சு விடுதூது 

 

காப்பு
சீர்பூத்த நல்லருணை ஈசான தேசிகன்மேல்
ஏர்பூத்த தூதொன் றிசைக்கவே - நீர்பூத்த
செஞ்சடையான் காலின்று செம்மையுட னேயெனது
நெஞ்சடைய வைத்தேன் நிசம்

நூல்

கலிவெண்பா

ஓங்காரத் துள்ளே உறும்பொருளாய் உத்தமர்கள்

ஆங்கார மின்றி அறைமனுவாய்த் - தூங்காமல்
உற்றார்தம் சிந்தை உயர்ஆ தனமீதே
பற்றோடு நின்ற பரமாகிக் - கற்றோரும்
கல்லாக் கயவரும் கண்ணிற் கதியளிக்கும்
உல்லாச னாகி உயர்மறையின் - நல்ல
பொருளாகி நின்ற புனித அடியார்
அருளாரச் செய்யும் அழகன் - இருளார்ந்த
கண்டமொடு துண்டமதிக் கண்ணி அணிந்திதழி
மண்டு கனஞ்சிரத்தின் மன்னுவித்தோன் - அண்டர்
பணியும் அரிதன் பழங்கண் அறுத்தோன்
அணியும் புலியாடை அண்ணல் - தணிவில்
அருண கிரிநாதன் ஆனந்தன் என்றும்
கருணை உருவாம் கடவுள் - தரணி
புனலனல்நீள் காலாய்ப் புகழ்வௌியாய் என்றும்
தனிமதியும் ஆன்மாவும் தானாய் - நினைவார்க்கு
அன்னதுவே யாகி அமையும் அபிராமன்
என்னை யுடைய இளமுலையாள் - தன்னை
இடமுடையான் ஞாலத்தில் எம்போல்வார் தம்மைக்
கடமுடையச் செய்வான் கருதித் - திடமுடைய
10
ஆனைத்தோல் நீக்கி அருங்காவி தோய்த்தஎழில்
தானைத்தோ லாகத் தரித்தழகார் - மானை
விடுத்துநற் கட்டங்கம் வேய்ந்து தீருநீறு
எடுத்துடலம் எல்லாம் இசைத்தே - தொடுத்த
அரவாதி நீக்கி அருங்கண் மணியை
விரவா திருக்க விசைத்துத் - தரமாகச்
சாத்தி அழகாகச் சங்கரனே தானென்ன
நேத்தி யுடனறியும் நீர்மைக்கா - வேய்த்த
திருநாமந் தன்னுடனே சீரருணை வைப்பில்
ஒருவாமல் ஈசானத்து உற்றே - வருவார்தம்
சித்தத்தே ஆர்கின்ற சித்தசவேள் செய்கைமுதல்
எத்தத்தை யும்நீக்கி இன்பமதைச் - சுத்தமுடன்
ஈவானை எண்ணுகின்றார் எண்ணு வடிவமெலாம்
ஆவானை அஞ்ஞத்தே ஆர்வார்பால் - மேவானை
அன்பர் அனுபவமாம் ஆகாச ஊரதனில்
இன்ப முடனே இருப்பானைத் - துன்பில்
மறைமுடிவென் றோதும் மதகரியின் மேலே
இறையளவும் நீங்காது இசைவாய்க் - குறையறவே
தங்கி மதத்தினர்தம் தன்மைகளுக் கேற்பத்தான்
அங்கங்கு இலகும் அழகனைத் - தங்கி
20
இருக்குமது நம்மையன்றி யேதுமில்லை யென்னா
உரைக்கும் உபநிடத ஒண்தூசு - இரைக்கும்
மணிநாவாம் காலின் மகிழ்ந்தடியார் தூக்கித்
துணிவோடு காட்டும் துவசன் - அணியோடே
பக்குவர்கள் கண்டு பரவி நடக்கவைத்த
சிக்கில் மறையென்னும் செங்கோலான் - தக்கவர்கள்
எண்ணிக் கழித்தால் இலங்கும் எழிலுண்மை
நண்ணும் இலக்கியமா நன்னாடன் - மண்ணதனில்
புக்குழலா வண்ணம் புனிதர் தமையாளும்
பக்குவமென் றோதும் பரியினான் - புக்கோர்
நிலையாகக் கண்டு நிலைத்து நிலையில்
மலையாமை என்னும் மலையான் - கலையோதிக்
காலடையா நின்றவர்கள் கண்ணீரோ டேயிசைக்கும்
மாலடையாப் பாவென்னும் மாலையினான் - சால
இரவணலை நீக்க எழிலடியார் கொண்ட
சிரவணமாம் செய்ய முரசான் - கரவெல்லாம்
தானந்த மாகத் தனையடைந்தார் தாங்கண்ட
ஆனந்த மானஉயர் ஆறுடையான் - வானந்தம்
தங்கி எழில்காட்டும் தண்மடத்தி லேமேவி
எங்கள் இடர்தவிர்க்கும் ஈசானன் - துங்கக்
30
குருநாதன் ஞானக் குருநாதன் என்றும்
ஒருநாதன் ஆகும் உரவோன் - திருநாதன்
ஆனவனும் வானவரும் அண்மி அடிபணியும்
ஞானகுரு மாதேவன் நாயேன்றன் - ஈனவுடல்
ஆதியெலாம் கைக்கொண்ட அண்ணல் அடியேனை
நீதியுடன் ஆண்ட நிருமலனை - ஏதமெலாம்
நீக்கி அடைந்தாரை நித்தியமாச் செய்தருளும்
பாக்கியனை யென்னுடனே பன்னாளும் - ஏக்கமற
வாழ்மனமே நீபோய் வழிபாடு செய்குவையே
தாழ்தியலை யென்பதுயான் தானறிவேன் - ஆழ்கடலின்
ஒத்த விழியாரை ஓர்ந்துற்ற அந்நாளில்
சித்தமே நீயதுவாய்ச் சேர்ந்தனையே - வித்தை
அதனை உணர்போதில் அன்னதுவாய் நின்றாய்
எதுவேனும் ஆவாய் எனினும் - அதனிடையே
என்னோடே யன்றி இருந்த இடங்காணேன்
இந்நாளில் நீதனியே ஏகினால் - உன்னைக்
கலைக்கோட்டை இட்டஎழிற் காரிகையார் ஆன
முலைக்கோட்டை யார்கள் முடுகி - நிலைக்கோட்டை
செய்யவரு வார்அவரைச் சேராதே சேராதே
வையமதை மெய்யென்னும் வாதியர்கள் - மெய்போல்
40
பிதற்றும் உரையதனைப் பேணாதே பேணின்
அதற்குள் ஒருபயனும் ஆராய் - மதத்தில்
உறைபொருளை ஆராமல் ஊர்வீதி நின்றே
பறையடிப்பார் தம்மைநீ பாரேல் - முறையாய்த்
தருமம் புரிவார்போல் தக்காரை ஏசும்
கருமிகளைக் கண்ணாலும் காணேல் - வருமித்
துறவிற் பயனேது சொல்லுமெனும் கெட்ட
மறவியரை நீவழியில் மன்னேல் - குறைவில்
அருளுடையார் போல அசடெழுதித் தூற்றும்
குருடர் இடத்தும் குறுகேல் - சுருதி
மொழியறிந்தார் போல முனிவரரை ஏசும்
இழிசனரைக் கண்டால் இணங்கேல் - பழியினொடு
பாவம் வருமென்று பாராது பல்நூலும்
ஆவா பழிப்பாரை அண்ணாதே - நீவா
தருகின்றோம் ஞனமெனச் சாற்றுவார் பின்னை
அருகொன்றி நின்னையே ஆய்வார் - திருகன்றி
வேறொன்றுங் காணாரவ் வீணரைநீ விட்டகல்தி
ஆறொன்றும் கோடீர அண்ணல்தனைப் -பேறொன்ற
உண்மை யுடன்புகழும் உத்தமரை ஏசுகின்ற
வெண்மையரை என்றும்நீ மேவாதே - வண்மையுடன்
50
செம்பொருளைத் தேடாது செம்பொருளைத் தேடுகின்ற
வம்பரிடை அன்பினைநீ வையாதே - அம்புவியில்
வேதாந்தம் ஓதியதை வேணபடி அச்சாக்கிப்
போதாந்தன் என்றொருபேர் போக்கியே - வேதாந்தம்
என்னே பணமளிப்ப தில்லையினிச் சித்தாந்த
நன்னேயங் கொள்வமென நாடியே - பின்னே
சிவதீக்கை கொண்டு சிவனுருவைக் கண்டு
பவமாற்றி விட்டதுபோல் பாடி - இவண்நோக்கின்
பிச்சையன்றி வேறொன்றும் பேணற் கிலையிதுவும்
நச்சில் இலச்சையென நாடியே - உச்சி
அரிமதமே முன்னிரண்டும் ஆயாது சொற்றாம்
கரிபலவும் இஞ்ஞான்று கண்டேம் - உரியீர்!
வருதிர் இதிலென்று வாயறைந்து வாணாள்
பெரிதும் உளதேல் பினையும் - குருதி
தருப்பணமா வைக்கின்ற சாத்தேயன் ஆகிக்
கருத்தொழிலீண் டுண்டென்று காட்டி - விருப்பம்
அதிலின்றிப் பின்னை அரிவையர்தோள் சேர்ந்தே
இதிலாகும் நன்மை இதுவே - மதியுடையோர்
கொள்ளப் படுமதாம் கோயில் இவர்பகமே
உள்ளணைந்து பார்மின் எனவோதிக் - கள்ளை
60
அருந்தி அழியும் அசடர் அநேகர்
பொருந்தி யுளதுஇப் புவனம் - திருந்தி
இதுகாறும் வந்த எழில்மனமே அன்னார்
பொதுபோல் உரைத்த புகலை - மதியாதே
ஊனருந்திக் கள்ளும் உடன்மாந்தி ஓர்வறலே
ஈனமறல் என்பாரை எண்ணாதே - மாநிலத்தில்
சாதனையைச் செய்யாதார் சாற்றும் மொழிகளெலாம்
வாதனையைச் செய்யும்நீ வாராதே - பாதையிலே
பேரான் மருட்டுகின்ற பேய்களுண்டு பேதையர்போல்
ஆராதே அன்னா ரிடத்தறைந்தேன் - நேராகத்
தம்மதமே மெய்ம்மதமாச் சாற்றும் மதமென்பார்
அம்மதத்தின் தெய்வத்தை ஆராயார் - இம்மதத்தின்
சின்னத்தை யேன்கொண்டீர் செப்புவீர் என்றுரைப்பார்
என்னத்துக் கீதிடுவ தென்றோரார் - பின்னைத்
திடவழக்கை விட்டுச் சிவசிவா தங்கள்
மடவழக்கே மெய்வழக்கா மன்ன - நடவழக்கை
மாற்றுவார் வேறான மாதிரியா யும்பொருளைச்
சாற்றுவார் தம்மையே தாமறியார் - நீற்றை
அணியும் அடியார் அவர்மடத்தர் அன்றேல்
பணியும் இயல்பு படியார் - துணியும்
70
பொருளெதுவோ இன்னார் புரட்டில் மருளேல்
ஒருபொழுதும் சொன்னேன் உணர்தி - கருவழிய
வேதமொடு சூதன் விளக்கும் உரையேனும்
ஏதமே என்பாரை ஏயாதே - போதமே
சித்தராய் இவ்வுலகில் சேர்ந்தோம் சிவன்முதலாம்
சுத்தரையாம் கண்டோம் துகளேதும் - இத்தரையில்
முல்லை முறுவல் முகிழ்முலையார் மாட்டினும்
இல்லை எமக்கென்று இசைத்துத்தம் - பல்லை
இளித்துப் பலரிடத்தும் ஈண்டித் திருநீறு
அளித்துச் சிலசொல் அறைந்து - குளித்து
விழிமூடி வந்தான் விமலன் எனக்கூறி
அழிவேதும் இல்லேம் அறிதி - பழிபோட
வந்த புலியை வகிர்ந்தாம் எனக்கூறிச்
சந்தையில் நாய்க்குத் தவிக்கின்ற - மந்திகளைக்
கிட்டினவர் எல்லாரும் கெட்டார் அவர்களும்பின்
மட்டிஉடல் நோயதனால் மாள்கின்றார் - கிட்டி
அவரை அடைந்தால் அறிவகலும் கண்டாய்
இவரை அகல்தி இனிநீ - பவரை
வணங்குவதும் தீதென்று வாய்ஞானம் பேசும்
துணங்கை அநேகம் சுலவும் - இணங்கி
80
அவரோடு சேர்ந்தால் அருஞானம் போகும்
பவரோகம் சாரும் பதையேல் - தவிராது
உனக்கேன் இதுவெல்லாம் ஓதுவதென் றாலோ
தனைக்காட்டி நின்றானைச் சார்ந்தே - எனக்காண
எல்லாமுஞ் சொல்லி இறைஞ்சி வரமாட்டாய்
நல்லாய்நீ வெண்பளிங்கின் ஆர்நிறம்போல் - எல்லாமும்
பற்றுவையே பற்றில் பதங்கெடுமே ஆதலினால்
உற்றுரைத்தேன் உன்றனக்கிவ் வுண்மையினை - மற்றினிநீ
ஆர்மதத்தும் சாராமல் அண்ணா மலைஅடைதி
ஏர்மிகுத்த கோவிலுக்குள் ஏகுதிமுன் - கார்மிகுத்த
தாரையென ஊற்றுமத தந்தியடி வந்தனைசெய்து
ஆரையணி செஞ்சடையா னாரிடத்தே - சீரையெலாம்
கொண்டமர்ந்த சுந்தரியாம் கொற்றொடியைக் கும்பிடுதி
இண்டைமுகீ என்னையாள் என்றுசொலி - மண்டை
கரங்கொண்ட கங்காளன் காமர் அடியைச்
சிரங்கொண்டு தாழ்தி திரும்பி - வரங்கொண்ட
அண்ணல் சினகரம்விட்டு அன்பின் வௌியாகி
வண்ணமணி வீதி வலமாக - நண்ணி
அமரர் பணியும் அபிராமன் ஆன
குமரன் அடியைக் குறித்துத் - திமிரம்
90
அகல ஒளிரும் அருணா சலத்தை
இகலது அறவே இறைஞ்சிப் - புகல
வினைகள் அறுமவ் வியன்சிலம்பைச் சுற்றி
எனையுடையான் ஈசானம் எய்தி - வினையே
அகல்தி எனநீ அகத்தெய்தி அண்ணல்
தகவில் வடிவைத் தலையால் - மிகவும்
பணிவாய்ப் பணிந்து பணிந்து சுழன்றே
அணைவாய் குருநாதன் ஆர்ந்த - துணிவாய்
அணையருகில் ஆகி அடிமலரில் வீழ்ந்து
பணிதி சிறுநாயேன் பாவம் - தணிய
எழுதி கரங்கள் இரண்டும் சிரமேல்
தொழுதி உறஅமைத்துச் சூழ்தி - அழுதி
கருணா கரனே கமலா லயனே
அருணா சலனே அரனே - பொருள்நீ
அறிவித்தால் அல்லாமல் ஆர அறியேன்
செறிவித்தி என்று சிலம்பி - முறையே
விமல அமல கமல நயன
சமல ரகித சதுர - கமலம்
அதனில் உறையும் அழக குழக
100
மதனம் விதனம் அகலும் - மதன
சகல புவன உயிரும் உனது
தகமை உறுவ தலது - தகவாய்
அறிய எவரும் அருகர் அலர்கள்
குறிய சிறிய வடிவ - பிறிவில்
சகுண நிகுண அசல சகல
தகுதி உடைய உறுவ - பகுதி
தனையின்றி நின்ற தலைவ நினையே
அனையின்றி உண்டானாய் ஆக - நினைவொன்றிக்
காண எனைவிடுத்தான் கண்டேன் அருள்புரிக
தாணுவே என்றுநீ சாற்றிநல் - பாணி
நிலைமை உறும்வண்ணம் நீகரைந்து போற்றி
தலைமை தனையுடையான் தாளைத் - தலைமேலாக்
கொண்டு வாய்மொழியைக் கூறிப் பதிலறிந்து
மண்டி எனதிடத்தில் மன்னிநீ - அண்டியே
கண்ட பொருளதனைக் காமர் இடத்தெய்தி
உண்டருளில் நெஞ்சேநீ ஓங்கு.
108

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design