கணங்கள் செல் படலம் (726 - 754)
726 | அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா னருளால் நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர் இந்தி ராதியர் யரையுந் தருதியென் றிசைத்தான். | 1 |
727 | இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப கன்ன யப்புட னிரைந்துபின் நந்தியெம் பெருமான் அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள் உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார். | 2 |
728 | உலக முய்ந்திட வெம்பிரான் மணம்புரி யுண்மை புலன தாதலும் அவனருண் முறையினைப் போற்றி மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார். | 3 |
729 | பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத்தி திரனே மூலத் தீப்புரை விடைப்பெருங் கேதுவே முதலாஞ் சூலத் தீக்காத் தாயிர கோடியோர் சூழக் காலத் தீப்பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில். | 4 |
730 | சுழல லுற்றிடு சூறையும் வடவையுந் தொலைய முழுது யிர்த்தொகை அலமர வுயிர்க்குமொய்ம் புடையோர் எழுப திற்றிரு கோடிபா ரிடத் தொகை யீண்ட மழுவ லத்தின னாயகூர் மாண்டனும் வந்தான். | 5 |
731 | நீடு பாதலத் துறைபவர் நெற்றியங் கண்ணர் பீடு தங்கிய வல்வகை நிறத்தவர் பெரியர் கோடி கோடியா முருத்திர கணத்தவர் குழுவோடு ஆட கேசனா முருத்திரன் கயிலையில் அடைந்தான். | 6 |
732 | கோர மிக்குயர் நூறுபத் தாயிர கோடி சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர் ஆரு மச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த வீர பத்திர வுருத்திரன் வந்தனன் விரைவில். | 7 |
733 | விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரலிற் கொண்டு தங்குறு குறட்படை கோடிநூ றீண்டப் பண்டு தாங்கலந் தரியரன் இருவரும் பயந்த செண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான். | 8 |
734 | முந்தை நான்முகன் விதிபெறான் மயங்கலும் முக்கட் டந்தை யேவலால் ஆங்கவன் நெற்றியந் தலத்தின் வந்து தோன்றிநல் லருள்செய்து வாலுணர் வளித்த ஐந்து மாறுமா முருத்திரர் தாமும்வந் தடைந்தார். | 9 |
735 | இத்தி றத்தரா முருத்திரர் அல்லதை யேனை மெத்து பல்புவ னங்களு மளித்தவண் மேவி நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர் புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில். | 10 |
736 | தொட்ட தெண்கடல் யாவையுந் துகளினால் தூர்க்கும் எட்டு நூறெனுங் கோடிபா ரிடத்தொகை யீண்டக் கட்டு செஞ்சடைப் பவர்முத லாகவே கழறும் அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார். | 11 |
737 | கூறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர் நாறு கொண்டுள கலத்தொடு பொடிபுனை நலத்தோர் நூறு கொண்டிடு கோடிபூ தத்தொடு நொடிப்பின் வீறு கொண்டகுண் டோதரன் போந்தனன் வெற்பில். | 12 |
738 | அண்டம் யாவையும் உயிர்த்தொகை யனைத்தையும் அழித்துப் பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு கொண்ட சாரதர் நூற்றிரு கோடியோர் குழுமக் கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை. | 13 |
739 | ஆன னங்களோ ராயிரம் இராயிரம் அங்கை மேனி வந்தபொன் மால்வரை புரைநிற மேவித் தானை வீரர்நூற் றைம்பது கோடியோர் சாரப் பானு கம்பனாந் தலைவன்ஒண் கயிலையிற் படர்ந்தான். | 14 |
740 | தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும் பங்கி யாகிய கேசமும் படைகளும் பறித்துத் துங்க மெதிய கணங்கள்பல் கோடியோர் சூழச் சங்கு கன்னன்வந் திறுத்தனன் தடவரை தன்னில். | 15 |
741 | காள கண்டனுந் தண்டியும் நீலனுங் கரனும் வாள்வ யம்பெறு விச்சுவ மாலியும் மற்றும் ஆளி மொய்ம்பின ராயபல் பூதரும் அனந்தம் நீளி ருங்கடற் றானையோ டணைந்தனர் நெறியால். | 16 |
742 | கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர் நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின் மாற்ற லார்புரம் அட்டவன் தாளிஆணை வழிபட் டேற்ற மிக்கஈ சானன்அக் கயிலையில் இறுத்தான். | 17 |
743 | எகின மாகிய மால்அயன் வாசன் இமையோர் புகலு மாதிரங் காவலர் கதிர்மதி புறக்கோள் மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள்வே றுள்ளார் மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார். | 18 |
744 | வாலி தாகிய மறைகள்ஆ கமங்கள்மந் திரங்கள் ஞால மாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள் கால மானவை ஏனைய பொருளெலாங் கடவுட் கோல மெய்திவந் திறுத்தன கயிலையிற் குறுகி. | 19 |
745 | இந்த வாசற்றினாற் கயிலையில் யாவரும் யாவும் வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து நந்தி யுள்புகுந் தமலனுக் கித்திறம் நவில முந்தை அன்னவர் யாரையுந் தருகென மொழிந்தான். | 20 |
746 | புராரி யித்திரம் மொழிதலுஞ் சிலாதனார் புதல்வன் ஒராய்மு தற்கடை குறுகியே உருத்திர கணங்கள் முராரி யாதியாம் விண்ணவர் முனிவரெல் லோரும் விராவு நீர்மையிற் சென்றிடக் கோயிலுள் விடுத்தான். | 21 |
747 | விடுத்த காலையில் அரியணை மீமிசை விளங்கிக் கடுத்த யங்கிய கண்டன்வீற் றிருப்பது காணூஉ அடுத்த வன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர் எடுத்து நீடநின் றேத்தியே அணுகினர் இமைப்பில். | 22 |
748 | நீண்ட சீருருத் திரர்தமை நிறைந்தபல் கணத்தை ஈண்டு தேவரை முனிவரை வீற்றுவீற் றிசையா ஆண்டு தன்விரற் சுட்டியே ஆதிநா யகற்குக் காண்டல் செய்துநின் றேத்தினன் வேத்திரக் கரத்தொன். | 23 |
749 | ஆர ழற்பெயர் அண்ணல்கூர் மாண்டன்ஆ டகத்தோன் வீர பத்திரன் முதலுருத் திரகண மேத்தப் பாரி டத்தவர் யாவரு மெம்பிரான் பாங்கிற் சேர லுற்றுநின் றேத்தினர் பணிந்தசிந் தையராய். | 24 |
750 | அன்ன காலையில் நான்முகன் எம்பிரான் அணிவான் உன்னி யேமுடி முதலிய பல்கல னுதவிப் பொன்னி னாயதோர் பீடிகை யிற்கொடு போந்து முன்ன ராகவைத் திறைஞ்சியே இத்திரம் மொழிவான். | 25 |
751 | ஐய கேளுனக் கில்லையாற் பற்றிகல் அடியேம் உய்யு மாறிவண் மணஞ்செய வுன்னினை உன்பால் மையல் மாசுணப் பணியெலா மாற்றிமற் றிந்தச் செய்ய பேரணி அணிந்தரு ளென்று செப்பினனே. | 26 |
752 | பங்க யாசனன் குறையிரந் தினையன பகர அங்கண் மூரல்செய் தன்புடன் நீயளித் திடலால் இங்கு நாமிவை அணிந்தென மகிழ்ந்தன மென்னார் செங்கை யாலணி கலத்தினைத் தொட்டருள் செய்தான். | 27 |
753 | பிரமன் அன்புகண் டிவ்வகை யருள்செய்த பின்னர் ஒருதன் மெய்யணி பணிகளே யணிகளா யுறுவான் திருவுளங்கொள அவ்வகை யாகிய செகத்தை அருள்பு ரிந்திடு பராபரற் கிச்செயல் அரிதோ. | 28 |
754 | கண்டி யாவரு மற்புத மடைந்துகை தொழலும் வண்டு லாங்குழற் கவுரி*பா லேகுவான் மனத்திற் கொண்டு பாங்குறை தலைவருக் குணர்த்தியே குறிப்பாற் பண்டு மாலயற் கரியவன் எழுந்தனன் படர. | 29 |
( * கவுரி - கௌரி - கௌரவண்ணம் உடையவள்; கிரிராஜ புத்திரி
எனினுமாம். கௌரம் - பொன்போன்ற வண்ணம். )
ஆகத் திருவிருத்தம் - 754
10. திருக்கல்யாணப் படலம் (755- 850 )
755 | நாற்ற டம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான் போற்றி முன்செல அமரரும் முனிவரும் புகழ வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும் பாற்றி யக்கமும் நீழலு மாமெனப் பாட. | 1 |
756 | சொன்ம றைத்தொகை ஆகம முதலிய துதிப்பப் பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றாள் வன்மை பெற்றகுண் டோதரன் மொய்ம்பிடை வைத்துச் சின்ம யத்தனி மால்விடை ஏறினன் சிவனே. | 2 |
757 | விடையின் மீமிசைத் தோன்றியே யெம்பிரான் விளங்கப் புடையின் வந்தவ ரல்லது திருநகர்ப் புறத்துக் கடையின் நின்றவர் யாவருங் கண்டுகண் களியா அடைய வேபணிந் தேத்தினர் அளக்கரின் ஆர்த்தார். | 3 |
758 | நந்தி மேல்கொண்டு நந்திமே வுறுதலும் நந்தித் தந்தி மாமுகத் தவுணர்கோன் இலமரத் தடிந்தோன் ஐந்து நூற்றெழு கோடிபூ தப்படை யணுக வந்து வந்தனை செய்துமுன் போயினன் மாதோ. | 4 |
759 | கதிருஞ் சோமனுங் கவிகையுஞ் சீகரங் காலும் உததி யண்ணல்சாந் தாற்றியும் உம்பர்தங் கோமான் புதிய கால்செயும் வட்டமு மெடுத்தனர் புடைபோய் முதிரும் ஆர்வமோ டப்பணி புரிந்தனர் முறையால். | 5 |
760 | பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி போரி யற்படு காகளம் வயிர்முதற் புகலுஞ் சீரி யத்தொகை இயம்பினர் பாரிடத் திறலோர். | 6 |
761 | அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவுமா லலயனும் மெய்த்த வம்புரி முனிவரும் ஏனைவிண் ணவரும் மொய்த்த தேரொடு மானமாப புள்ளிவை முதலாந் தத்த மூர்திமேல் கொண்டனர் செய்பணி தவாதோர். | 7 |
762 | தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவருந் தவத்தாற் காழ்ந்த நெஞ்சுடைப் பூதரு மேனைய கணமுஞ் சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்றுதொல் லுலகம் வாழ்ந்தி டும்படி யேகினன் இமையமால் வரைமேல். | 8 |
763 | வார்ப்பெ ரும்பணை யாதிய வரம்பில்பல் லியத்தின் ஆர்ப்பு மெங்கணும் வௌ¢ளிடை யின்றியே யகல்வான் தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையுஞ் சுரர்கள் ஆர்ப்பும் வாழ்த்தொலி அரவமும் புணரியுண் டெழுமால். | 9 |
764 | வேறு அனைய தன்மையி லாதியம் பண்ணவன் பனிகொள் வெற்பிற் படரஅம் மன்னவன் இனிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன் புனித மாநக ரிற்கொடு போயினான். | 10 |
765 | போத லோடும் புனிதன் வரத்தினைக் காத லாற்கண்டு கண்களப் பாகியே ஆதம் எய்திநின் றஞ்சலித் தேத்தியே வீதி யாவும் விழாவயர்ந் திட்டவே. | 11 |
766 | மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார் அண்டர் நாயகன் அற்புதப் பேருருக் கண்டு தாழ்ந்து கரைதவிர் காதலாந் தெண்டி ரைப்படிந் தார்செயல் வேறிலார். | 12 |
767 | நிறைத்த பூண்களும் நேர்ந்தபொன் னாடையும் நறைத்த சாந்தமும் நாண்மலர்க் கண்ணியும் பிறைத்தி ருச்சடைப் பிஞ்ஞகன் பேரெழில் மறைத்த தென்று மனந்தளர் வார்சிலர். | 13 |
768 | உய்யு மாறென் உவர்தமைக் காண்டலு வெய்ய காமக் கனல்சுட வேவுறுந் தைய லார்கள் தனுவுறு நீறுகொல் ஐய ராகத் தணிந்ததென் பார்சிலர். | 14 |
769 | எழாலை யன்னசொல் ஏந்திழை மாதரார் குழாம கன்று குழகனைச் சேர்தலுங் கழாலு கின்றபல் காழுடை மேகலை விழாதி றைஞ்சினர் மெல்லிய லார்சிலர். | 15 |
770 | அல்லி சேர்தரும் அம்புய மீமிசை வல்லி யன்னவர் வான்துகில் சோர்வுறா மெல்ல வீழ்தலும் மின்னிடை யார்க்கெலாம் இல்லை யோபுனை யென்றுரைப் பார்சிலர். | 16 |
771 | வாசம் வீழ்தலும் வந்துவந் தில்லிடைத் தூசு டுத்தில மென்றொர் துகில்புனைந் தாசை யோடுசென் றன்னதும் வீட்டியே ஊசல் போன்றனர் ஒண்டொடி மார்சிலர். | 17 |
772 | மாண்ட சாயன் மடந்தைய ரேதனை வேண்டி மால்கொடு வீடுறும் வேலையில் ஈண்டு போற்று கெனவுமெண் ணாததோ ஆண்ட கைக்கிய லாகுமென் பார்சிலர். | 18 |
773 | கரும்பு நேர்மொழிக் காரிகை மாதரார் விரும்பி வேண்டவு மேவலர் போலுமால அரும்பொன் மேனியெம் மண்ணலுக் குள்ளமும் இரும்பு கொல்லென் றியம்பிடு வார்சிலர். | 19 |
774 | நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்குமால் பெருக்கி னாரவர் பேதுற லோர்கிலார் உரைப்ப தென்கொல் உயிர்க்குயி ராகியே இருக்கு மிங்கிவர் என்றுரைப் பார்சிலர். | 20 |
775 | திருகு வார்சடைச் செய்யனை நோக்கிநின் றுருகு வார்சிலர் உள்ளுற வெம்பியே கருகு வார்சிலர் காதலி மாரொடும் பெருகு காதலைப் பேசுகின் றார்சிலர். | 21 |
776 | வேறு ளார்மெய் விளர்ப்பினை நோக்கியே ஈறி லாரை இவரணைந் தார்கொலோ நீறு மெய்யின் நிலவிய தென்றவர்ச் சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். | 22 |
777 | கட்டு செஞ்சடைக் கான்மிசை யூர்தர விட்ட வெண்மதி மெல்லிய லார்தமைச் சுட்ட தம்ம சுமப்பதென் நீரெனாக் கிட்டி நின்று கிளத்திடு வார்சிலர். | 23 |
778 | கஞ்ச மேலய னாதிக் கடவுளர் தஞ்ச மென்று சரண்புக வுண்டதோர் நஞ்சின் வெய்யகொல் நங்கையர் கொங்கைமேல் துஞ்சு கின்ற துயிலதென் பார்சிலர். | 24 |
779 | பின்ன ருள்ள பொருந்தொழி லாற்றுவான் துன்னு வீரெனில் தொல்குழு ஆடவர் நன்ன லத்தொடு நண்ணமின் னாரையே இன்னல் செய்வதென் என்றுரைப் பார்சிலர். | 25 |
780 | சாற்றி யிங்கினி யாவதென் தையல்மீர் ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட மாற்றி லாத மலைமகள் போலயாம் நோற்றி லேமென நொந்துயிர்ப் பார்சிலர். | 26 |
781 | தேவர் உய்யத் திருமணஞ் செய்திட மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர் ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம் ஏவர் செய்வ ரெனஉரைப் பார்சிலர். | 27 |
782 | மையல் வேழம் வயப்புலி போல்வரும் வெய்யர் தம்மை மெலிவிப்ப தன்றியே நொய்ய மான்புரை நோக்கியர்க் குந்துயர் செய்யு மோவெனச் செப்புகின் றார்சிலர். | 28 |
783 | நங்கள் கொற்றவன் நற்றவத் தாற்பெறு மங்கை பாலின் மணப்பொருட் டேகினர் இங்கெ மக்கினி மைத்திறஞ் செய்கலார் சங்க ரர்க்குத் தகாதிதென் பார்சிலர். | 29 |
784 | பேதை நீரவர் பேரிளம் பெண்மையோர் ஆதி யந்தத் தணங்கினர் இன்னணம் வீதி தோறும் விரவியத் தாருக மாத ராரினும் மாதர்பெற் றாரரோ. | 30 |
785 | பண்டை வேதன் பதத்தினும் பேரெழில் கொண்டு நின்றவக் கோநகர் வீதியின் அண்டம் வெ·க அணிபடுத் திட்டவை கண்டு போந்தனன் கண்ணுத லண்ணலே. | 31 |
786 | செய்ய தான செழுங்கம லாசனத் தையல் காமுறத் தக்கன வீதிகள் பைய நீங்கிப் பராபரை யாகிய ஐயை கோயில் அணித்தென நண்ணினான். | 32 |
787 | வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்றுகா றாய்ந்து நாடற் கரியவெம் மண்ணல்முன் பூந்த டம்புனல் பூரித்த பல்குடம் ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார். | 33 |
788 | இருவ கைப்படு மெண்வகை மங்கலப் பொருண்மை முற்றவும் பூவையர் பற்பல வரிசை யிற்கொடு வந்தெதிர் எய்தினர் அரிய யற்கரி தாகிய அண்ணல்முன். | 34 |
789 | அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ் சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை குறுகு தண்புனற் கொள்கல மேந்தியே மறுகில் வந்தனர் மங்கையர் எண்ணிலார். | 35 |
790 | நெருக்கு பூண்முலை நேரிழை யாரவர் பொருக்கெ னாவெதிர் போந்துயிர் யாவினும் இருக்கும் ஆதி யிறைவனை யேத்தியே தருக்கொ டேநின்று தந்தொழி லாற்றினார். | 36 |
791 | எங்கள் நாதன் எதிருற எண்ணிலா மங்கை மார்சுடர் மன்னிய தட்டைகள் செங்கை யிற்கொடு சென்று வலன்வளைஇ அங்கண் மும்முறை அன்பொடு சுற்றினார். | 37 |
792 | ஆன காலை அருமணச் சாலைமுன் ஞான நாயகன் நட்பொடு நண்ணியே வானு லாய மழவிடை நீங்கினான் யான மீதினின் றியாரும் இழிந்திட. | 38 |
793 | விடையி ழிந்துழி மேனைவிண் ணாட்டவர் மடமின் னாரொடு வந்து பராபரன் அடிகண் மீதினில் ஆன்பொழி பால்கொடு கடிதின் ஆட்டினள் கைதொழு தேகினாள். | 39 |
794 | நாதன் அவ்வழி நந்திக ளுய்த்திடும் பாது கைக்கட் பதமலர் சேர்த்தியே போதன் மாதவன் பொற்கரந் தந்திடக் கோதில் மாமணக் கோயிலுள் எய்தினான். | 40 |
795 | வேறு பல்லிய மியம்ப வானோர் பரவவிஞ் சையர்கள் பாட ஒல்லெனக் கணங்க ளார்ப்ப உருத்திரர் யாருஞ் சூழ மெல்லெனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும் வேண்ட மல்லலங் கோயி லுள்ள வனப்பெலாம் நோக்க லுற்றான். | 41 |
796 | உலாவுறு சுரும்பு மூசா ஒண்மலர்ச் சோலை வாலி நிலாவுறழ் புனல்சே ரோடை நெடுந்தடம் நிறம்வே றாகிக் குலாவுமண் டபங்க ளின்ன கொண்டியல் வனப்புக் காட்டிச் சிலாதனன் மதலை கூறச் சென்றுசென் றிறைவன் கண்டான். | 42 |
797 | கண்டலுந் தம்போல் தங்கள் காமர்விண் ணகரந் தானும் மண்டல வரைப்பின் வந்து வைகிய தாங்கொ லென்னா அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்துங் காமர் தண்¢டலை யாடல் செய்துந் தலைத்தலை திரிதந் துற்றார். | 43 |
798 | நந்தியந் தேவு காட்ட நல்வனப் பனைத்தும் நோக்கிக் கந்தமென் போது வேய்ந்த கடிமணச் சாலை தன்னில் இந்திர நீலத் திட்ட எழில்நலத் தவிசி னும்பர் வந்துவீற் றிருந்தான் எல்லா மறைகட்கும் மறையாய் நின்றான். | 44 |
799 | வீற்றிருந் தருளு மெல்லை வீரபத் திரன்தீப் பேரோன் ஆற்றல்கொள் கூர்மாண் டேசன் ஆடகன் ஐயன் ஏனோர் போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர் ஏற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவற் சூழ. | 45 |
800 | வேறு அமையப்படும் அப்பொழு தத்தினில் ஆதி யண்ணல் விமலத்திரு மாமணங் காணுற மேலை யண்டச் சுமையுற்றிடும் எப்புவ னத்தருந் தொக்க நீரால் இமையச்சயி லந்துளங் குற்ற திடுக்கண் எய்தி. | 46 |
801 | பொன்பா லிமையந் துளங்குறறுழிப் போற்று சேடன் தன்பால் அவனி யெனலாந் துலைத்தட்டி ரண்டின் வன்பால தான படபா லதுதாழ மற்றைத் தென்பால தாற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க. | 47 |
802 | ஓங்குற் றதுதென் புவியாதலும் உம்ப ரெல்லாம் ஏங்குற் றனர்மண் ணுகோர்கள் இடுக்க ணுற்றுத் தீங்குற் றனவோ எமக்கென்று தியக்க முற்றார் பாங்குற் றிடுதொன் முனிவோரும் பரிய லுற்றார். | 48 |
803 | இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் முன்னோனு மன்ன செயல்கண்டு முறுவ லெய்தி அன்னோர் குறைநீத் திடநந்தியை நோக்கி ஆழி தன்னோர் கரத்திற் செறித்தானைத் தருதி யென்றான். | 49 |
804 | என்றா னதுகாலையில் நந்தி யிறைஞ்சி யேகிக் குன்றாத கும்ப முனிவன்றனைக் கூவ அங்கட் சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்ன ருய்ப்ப மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல். | 50 |
805 | தாழுந் தவத்தொன் றனைக்கண்ணுதற் சாமி நோக்கித் தாழுங் குறியோய் இவண்யாவருஞ் சார்த லாலே தாழும் புவிதக் கினமுத்தரஞ் சால ஓங்கத் தாழுஞ் சுவர்க்க நிலனுந் நனிதாழு மன்றே. | 51 |
806 | தெருமந் துழலுந் தரைமன்னுயிர் செய்த தொல்லைக் கருமந் தனைவிட் டயர்வெய்திக் கலங்குகின்ற பெருமந் தரமே முதலாய பிறங்கல யாவும் அருமந்த மேரு வரையுந்தவ றாகு மம்மா. | 52 |
807 | ஆனான் முனிகேள் ஒருநீயிவ் வசலம் நீங்கித் தேனார் மருத வளமேயதென் னாடு நண்ணி வானார் பொதிய மலைமேவுதி வைய மெல்லாம் மேனா ளெனவே நிகராதி விளங்கு மென்றான். | 53 |
808 | பிறையொன்று வேணிப் பரனிங்கிது பேச லோடும் அறையொன்று தீஞ்சொற் றமிழ்மாமுனி அச்ச மெய்திக் குறையொன் றியான்செய் துளனோகொடி யேனை ஈண்டே உறையென் றிலைசே ணிடைச்செல்ல வுரைத்தி எந்தாய். | 54 |
809 | என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தி லுண்டோ அன்னத் தவனும் உனைநேர்கிலன் ஆத லால்நீ முன்னிற் றெவையுந் தவறின்றி முடித்தி மன்னோ. | 55 |
810 | வேறுற்றிடு தொன்முனி வோர்களின் விண்ணு ளோரின் ஈறுற்றிடு மோவிது செய்கை எவர்க்கும் மேலாம் பேறுற்ற நின்னால் முடிவாகும் பெயரு கென்று கூறுற் றிடலும் முனியீது குறித்து ரைப்பான். | 56 |
811 | வான்செய்த மேனி நெடுமான் மகவேள்வி மன்னன் தேன்செய்த கஞ்சத் தயனிற்கவிச் செய்கை தீயேன் தான்செய் திடவே பணித்திட்டனை தன்மை யீதேல் நான்செய் ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய். | 57 |
812 | ஈங்கிப் பணியை யளித்தாயெனில் எந்தை யுன்றன் பாங்குற்ற புத்தேள் மணக்காட்சி பணிந்தி டாமல் நீங்கற் கரிதாங் கவல்கின்றதென் னெஞ்ச மென்ன ஓங்கற் கயிலைத் தனிநாயகன் ஓத லுற்றான். | 58 |
813 | வேறு சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண் வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி நந்தமை யுன்னி யாங்கே நாள்சில இருத்தி பின்னர் முந்தையி லெமது பாங்கர் வருதியால் முனிவ என்றான். | 59 |
814 | என்றிவை அமலன் செப்ப இசைதரு புலத்தினாகி மன்றமர் கழல்க டம்மைப் பன்முறை வணக்கஞ் செய்து நின்றுகை தொழுது போற்றி நெடிதுயிர்த் தரிதின் நீங்தித் தென்றிசை யெல்லை நோக்கிச் சிறுமுனி கடிது போனான். | 60 |
815 | கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த வெற்பதும் வன்மை சிந்த வில்வல னொடுவா தாவி கற்பனை யகன்று மாயக் காவிரி நீத்தத் தோடு முற்பகல் படர்ந்த தென்ன முனிவரன் தென்பாற் போனான். | 61 |
816 | மறைபுகல் வேள்வி யாற்று மாவலி வலிகொள் காட்சிக் குறியவன் துணையாய் மற்றோர் குறளுமுண் டாங்கொ லென்னா நெறியெதிர் அவுணர் தம்முள் ஒருசிலர் நில்லா தோடச் சிறுமுனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான். | 62 |
817 | முண்டகன் வலிகொண் டுற்ற மூவெயில் அழிப்பான் முன்னி அண்டரும் புவன முற்று மாகிய கொடிஞ்சி மான்றேர் பண்டொரு பதத்தா லூன்றிப் பாதலத் திட்ட அண்ணல் கொண்டதொல் லுருவ முன்னிக் குறுமுனி அங்கண் உற்றான். | 63 |
818 | பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முனிவன் வைகத் துதியுறு வடபாற் றென்பாற் புவனியோர் துலைபோ லொப்ப அதுபொழு துயிர்க ளானோர் அணங்கொரீஇ அரனை யேத்தி மதிமகிழ்ந் தமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம். | 64 |
819 | கதுமென மலயந் தன்னிற் கடமுனி சேற லோடு முதுமைகொ ளிமையம் புக்க முனிவருஞ் சுரருந் தேர்ந்து மதிமலி சடையெம் மண்ணல் வரம்பில்பே ரருளும் அன்னோன் பதமுறை வழிபட் டோர்தம் பான்மையும் பரவ லுற்றர். | 65 |
820 | அங்கது பொழுது தன்னில் அரசன திசைவால் எங்கள் சங்கரி ஐயை காப்பச் சசியென்பான் அடைப்பை ஏநதக் கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப் பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள். | 66 |
821 | வந்திடு முலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி அந்தமொ டாதி யில்லான் அடிகளை வணங்க முன்னோன் முந்துறு தவிசின் றன்பான் முற்றிழை யிருத்தி யென்ன இந்திரை முதலோர் யாரு மெத்திட இருத்நதா ளன்றே. | 67 |
822 | இருந்திடு மெல்ல தன்னில் ஏலவார் குழலி யென்னுங் கருந்தடங் கண்ணி னாளைக் கண்ணுதற் பராப ரற்கு விரைந்தருள் செய்ய வுன்னி வேந்தன திசைவான் மேனை பெருந்தடம் புனலுஞ் சந்து மலர்களும் பிறவுந் தந்தாள். | 68 |
823 | தருதலு மிமையத் தண்ணல் தாழ்ந்தன னிருந்து தேவி சிரகநீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம் விரைமலர் புனைந்து நின்ற வியன்கடன் பலவுஞ் செய்து பொருவரு மகிழ்ச்சி யோடு பூசனை புரிந்தான் மாதோ. | 69 |
824 | பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப் பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து நேசமொ டளித்தே னென்னா நெடுமறை மனுக்கள் கூறி வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி. | 70 |
825 | எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ் சங்கரன் உலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்றால் அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார். | 71 |
826 | ஆனதோ ரமைந் தன்னில் ஆடினர் அமரர் மாதர் கானம திசைத்தார் சித்தர் கந்தரு வத்த ரானோர் ஏனைய விருவர் தாமு மேழிசைக் கீதஞ் செய்தார் வானவர் முனிவர் யாரும் மறைகளை யறைய லுற்றார். | 72 |
827 | அல்லியங் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக வல்லியும் மற்று ளோரும் மங்கலம் பாட லுற்றார் சல்லரி திமிலை காளந் தண்ணுமை சங்க மாதிப் பல்லிய மியம்பிச் சூழ்ந்து பாரிடத் தொகையோர் ஆர்த்தார். | 73 |
828 | அதுபொழு திமையத் தண்ணல் ஆபொழிந் திட்ட தீம்பால் கதலிமாப் பலவின் தீய கனிவகை நெய்தே னாதி மதுரமாஞ் சுவையின் வர்க்கம் பரம்பில வீற்று வீற்று நிதிகொள்பா சனத்தி லிட்டு நிருமலன் முன்ன ருத்தான். | 74 |
829 | மறைநெறி யினைய வெல்லாம் மலைமக னுய்த்து மற்றெம் மிறையிவை நுகர்தல் வேண்டு மெனத்தொழ இனிதே யென்னாக் கறைமிடற் றணிந்த மேலோன் கரத்தினால் அவற்றைத் தொட்டாங் குறுபெருங் கருணை செய்தே உவந்தனங் கோடி யென்றான். | 75 |
830 | தொன்மைகொ ளருளின் நீரால் துய்த்தன வாகத் தொட்ட நின்மல வுணவை மன்னன் நேயமோ டங்கண் மாற்றி இன்மலர் கந்தந் தீர்த்த மிவற்றொடு மொருசா ருய்ப்ப நன்மகிழ் வோடு வேதா நாயகற் குரைக்க லுற்றான். | 76 |
831 | படங்கிளர் சேடன் தாங்கும் பார்விசும் புறையும் நீரார் அடங்கலும் மணஞ்செய் போதத் தவ்வவர்¢கடுத்த தாற்றி நடந்திடு மொழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற் சடஙகினி யுளது முற்றத் தண்ணளி புரிதி யென்றான். | 77 |
832 | என்னலு முறுவல் செய்தே இறையருள் புரிய வேதன் வன்னியு மதற்கு வேண்டும் பொருள்களும் மரபிற் றந்து பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையிற் சூழத் தன்னிக ரில்லா மன்றற் சடங்கெலாம் இயற்றல் செய்தான். | 78 |
833 | அந்தணர் கரண மெல்லா மாற்றியே முடிந்த பின்னர்த் தந்தையுந் தாயுமாகி உலகெலாந் தந்தோர் தம்மை முந்துற அயனும் பின்னர் முகுந்தனு மதற்குப் பின்னர் இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்ச லுற்றார். | 79 |
834 | அரனுடன் உமையா டன்னை யாங்கவர் பணித லோடும் உருகெழு நிலையுட் கொண்ட உருத்திரத் தலைவ ரேனோர் பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன்பின் னாகக் கிரியுறை யிறைவன் மைந்தன் கேளொடு வணக்கஞ் செய்தான். | 80 |
835 | தமதுமுன் பணிகின் றோர்கள் தமக்கெலா மீசன் றானும் உமையும்நல் லருளைச் செய்ய வோர்ந்திது பதமென் றுன்னி இமகிரி புரந்த வண்ணல் ஈண்டுறை நீரர்க் கெல்லாம் அமலன துணவு மற்றும் அளிப்பனென் றகத்துட் கொண்டான். | 81 |
836 | ஆய்ந்திடு மறைகள் போற்று மாதிதன் தீர்த்தம் போது சாந்தமொ டவிகள் தம்மைச் சதுர்முகன் முதல்வா னோர்க்கும் வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும் மன்னன் ஈந்திட வவற்றை அன்னோ ரியாவரும் அணிந்துட் கொண்டார். | 82 |
837 | ஆலமா மிடற்றோற் கான அமலமாம் பொருளை யேற்றுச் சீலமோ டணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து நந்தம் மூலமாம் வினைகட் கின்றே முடிபொருங் குற்ற தென்றார் மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்ப லாமோ. | 83 |
838 | அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்க டம்மைப் பனிவரை யிறைவன் றானும் பன்னியுந் தமரு ளாரும் எனைவரு மருந்தி மேற்கொண் டெல்லையில் இன்ப முற்றார் வினைவலி யொருவி மேலாம் வீடுபே றடைந்து வார்போல். | 84 |
839 | தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல் பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள். | 85 |
840 | சீருறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றங் கேளா ஆருயிர் முழுதும் நின்றே யனைத்தையு முணர்ந்து கூட்டும் பேரரு ளுடைய நாதன் பேதுறல் மடந்தை யென்னா மாரன்வந் துதிக்கும் வண்ணம் மனத்திடை நினைந்தா னன்றே. | 86 |
841 | நினைதரு மெல்லை தன்னில் நெடியமான் முதலா வுள்ள அனைவரு மருட்கை யெய்த அழுங்கிய இரதி நோக்கி மனமகிழ் சிறந்து கார்காண் மஞ்ஞையிற் களிப்ப அங்கட் குனிசிலை கொண்ட மாரன் கொம்மெனத் தோன்றி னானே. | 87 |
842 | முன்பொடு தோன்று மாரன் முதல்வியோ டிருந்த நாதன் பொன்புனை கமலத் தாள்முன் போந்தனன் தாழ்ந்து போற்றி என்பிழை பொறுத்தி யென்ன யாம்உனை முனியின் அன்றோ பின்பது தணிவ துள்ளம் பேதுறல் மைந்த என்றான். | 88 |
843 | எரிபுனை நமது நோக்கால் இறந்தநன் னுடலம் நீறாய் விரைவொடு போயிற் றன்றே வேண்டினள் இரதி யன்னாட் குருவமா யிருத்தி ஏனை உம்பரோ டிம்மபர்க் கெல்லாம் அருவினை யாகி யுன்றன் அரசியல் புரிதி என்றான். | 89 |
844 | செய்வினை முறையால் ஈசன் சித்தசற் கினைய கூறி அவ்வவன் அரசுஞ் சீரு மாணையும் வலியும் நல்கி மைவிழி யிரதி யோடு மன்னுதொல் புரத்துச் செல்ல மெய்விடை யுதவ அன்னோர் விரைந்துடன் தொழுது போனார். | 90 |
845 | இரதியும் மதனு மேக இந்திர நீலத் திட்ட அரியணை யிருந்த நாதன் அம்மையொ டிழிந்து அன்னேர் திருவுரு வுடைய மேலோர் தேவர்மா முனிவ ரெனோர் பரவினர் செல்லப் பூதர் பல்லியந் தெழிப்பச் சென்றான். | 91 |
846 | மன்னுயிர்ச் குயிராய் நின்றோன் மால்விடை யேறி மாதைக் தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக்கொடு நடத்தி வானோர் தொன்னிலை யமைந்து செல்லத் துவன்றியே கணங்கள் சுற்றப் பொன்னிய லிமையந் தீர்ந்து வௌ¢ளியம் பொருப்பில் வந்தான். | 92 |
847 | அன்னதோர் காலை மாலை அயனைவெற் பரசை வேள்வி மன்னனை அமரர் தம்மை முனிவரை மாத ரார்கள் என்னவர் தமையுந் தத்த மிடந்தொறு மேகும் வண்ணம் முன்னுற விடுத்தா னென்ப மூலமும் முடிவு மிலோன். | 93 |
848 | அடுகன லவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள் வடிவின னாதி யான வரம்பிலா உருத்தி ரர்க்குங் கடகரி முகத்தி னாற்குங் கணங்களில் தலைமை யோர்க்கும் விடையினை யுதவி ஐயன் வியன்பெருங் கோயில் புக்கான். | 94 |
849 | ஏறெனுங் கடவுள் மீதில் இம்மென இழிந்து அன்னோர் கூறுடை முதல்வி யோடுங் கோநகர் நடுவ ணெய்தி ஆறணி சடையெம் மண்ணல் அரியணைப் பீட மீதில் வீறொடு தொன்மை யேபோல் வீற்றிருந் தருளி னானே. | 95 |
850 | அன்பினர்க் கௌ¤வந் துள்ள ஆதியம் பரமன் மாது அன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந் துன்பகன் றிருபா லாகித் துவன்றிய உயிர்க ளெல்லாம் இன்பொடு போக மாற்றி இனிதமர் வுற்ற வன்றே. | 96 |
11. திருவவதாரப் படலம் (851- 977)
851 | பற்பக லினைய வாற்றாற் படர்தலும் பின்னோர் வைகல் முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசைகாப் பாளர் சொற்படு முனிவர் வானோர் யாவருந் தொல்லை மேரு வெற்பினிற் குழுமிச் சூரால் மிகமெலிந் திரங்கிச் சொல்வார். | 1 |
852 | உலகினை அவுணர்க் கீந்தே யோகிபோல் வைகி நம்பால் மெலிவினைப் படுத்தி யாம்போய் வேண்டலும் இரக்க மெய்தி மலைமக டன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத் தலையளி புரியான் வாளா இருப்பதென் தாணு வானோன். | 2 |
853 | இவறலு மிகலு மின்றி யார்க்குமோர் பெற்றித் ததாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்குஞ் சிவனையாம் வெறுத்தல் குற்றஞ் சிறந்தநோன் பியற்றி டாதே தவறுசெய் தனமென் றெம்மை நோவதே தக்க தென்றார். | 3 |
854 | ஆயினு மவன்றாள் போற்றி அடையின்நன் கனைத்து மாகுந் தீயன வகலு மீது திண்ணமாம் அதனால் இன்னுங் காய்கதிர் மதிசூழ் கின்ற கயிலைய கிரியின் முக்கண் நாயகற் கிதனைக் கூற நாமெலாம் போது மென்றார். | 4 |
855 | போதர விசைந்த காலைப் பொன்னலர் கமலப் புத்தேள் மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டுந் தூதுவ னொருவன் றன்னைத் தூண்டிமுன் னறிது மென்றே ஊதையங் கடவு டன்னை நோக்கியீ துரைக்க லுற்றான். | 5 |
856 | வடவரை யதனில் மூன்று மாண்குவ டெறிந்து வௌவி உடல்சின வரவ முட்க உதவியி லுய்த்த மைந்த படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பண்ணவன் செயலை வௌ¢ளிக் கடிவரை நகரத் தெய்திக் கண்டனை மீடி யென்றான். | 6 |
857 | பல்லிதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றாள் வில்லுடை மதன வேளை விழித்தடு கடவுள் முன்னஞ் செல்லுவ தரிது செல்லில் தீமையே பயக்கு மென்பால் ஒல்லுவ தன்றிச் செய்கை உள்ளமும் வெருவு மென்றான். | 7 |
858 | கூற்றிது நிகழ்ந்த வேலைக் கோகன தத்து மேலோன் காற்றினுக் கரசை நோக்கிக் கம்பலை கொள்ளேல் யாண்டும் ஊற்றமொ டுலவல் செய்யு பொருவனை நீயே யன்றி வீற்றொரு தேவ ருண்டோ மேலிது புரிதற் பாலோர். | 8 |
859 | உற்றுழி உதவி செய்வோர் உலப்புறா தெவையும் ஈவோர் அற்றமில் தவத்தா றுற்றோர் அமர்புரி வீர ராவோர் மற்றொரு பொருளும் வெ·கார் வருத்தமு மோரார் ஆவி இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வ ரன்றே. | 9 |
860 | ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடு முதவிக் காகப் போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வே றேதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தீயின் காதலன் விடைகொண் டேகிக் கயிலைமால் வரையிற் சென்றான். | 10 |
861 | குன்றதன் புடையில் வீழுங் குரைபுன லாற்றின் ஆடி மன்றலங் காமர் காவின் மலர்மணம் அளாவி வாரித் தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை நின்றதோர் நந்தி காணூஉ வுரப்பினன் நெடிது சீறி. | 11 |
862 | பொற்பிரம் பொன்று பற்றிப் பொலன்முதற் கடையைப் போற்றி நிற்புறும் ஆணை வள்ளல் நெடுஞ்சினத் துரப்ப லோடுங் கற்பொழி யெழிலி கான்ற கனையொலி கேட்ட பாம்பின் முன்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான். | 12 |
863 | வேறு ஒல்லென வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன் எல்லையில அச்சமொ டிரங்கி யேயெழீஇத் தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன் மல்லலங் கழல்களை வணங்கிக் கூறுவான். | 13 |
864 | மாலயன் மகபதி வானு ளோரெலாம் ஆலமர் கடவுளை யடைதல் முன்னிநீ காலைய தறிந்தனை கடிது செல்கென மேலுரை செய்தனர் வினையி னேனுடன் | 14 |
865 | கறுத்திடு மிடறுடைக் கடவு ளாடலைக் குறிக்கரி தஞ்சுவல் குறுக என்றியான் மறுத்தனன் அனையர்தம் வருத்தங் கூறியே ஒறுத்தெனை விடுத்தன ருடைய வன்மையால். | 15 |
866 | ஆதலின் அடியனேன் அஞ்சி யஞ்சியே மேகு தென்றியாய் மெல்ல வந்தனன் ஓதிட நினைந்திலன் உனக்கு மற்றிது பேதைமை உயர்வினேன் பிழைபொ றுத்திநீ. | 16 |
867 | தானவர் தொழவரு தகையில் சூரனால் மானம தொருவியே வருத்துற் றோய்ந்தனன் ஆனதொன் றுணர்கிலேன் அறிவு மாழ்கினேன் கூனைய தேவரு மினைய நீரரே. | 17 |
868 | அறைதரு கணத்தரு ளாதி யாகிய இறைவநின் முனிவினுக் கிலக்குற் றாரிலை சிறியவென் பொருட்டினாற் சீற்றங் கோடியோ பொறைபுரிந் தருளெனப் போற்றி வேண்டினான். | 18 |
869 | ஆண்டகை நந்தியெம் மடிகள் அவ்வழி மூண்டெழு தன்பெரு முனிவு தீர்ந்தியாம் ஈண்டுநின் னுயிர்தனை யீதும் நிற்கலை மீண்டனை போகென விடைதந் தேவினான். | 19 |
870 | சீரிய நந்தியந் தேவன் ஏவலும் மாருதன் அவனடி வணங்கி வல்லையின் நேரறு கயிலையின் நீங்கி நீடுபொன் மேருவில் விண்ணவர் குழுவை மேவினான். | 20 |
871 | மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன் பூவடி வந்தனை புரிந்து நந்திதன் காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம் யாவதும் முறைபட இயம்பி னானரோ. | 21 |
872 | காற்றுரை வினவியே கமலக் கண்ணணும் நாற்றிசை முகத்தனும் நாகர் செம்மலுஞ் சாற்றருந் துன்பினர் தம்மி லோர்ந்திடாத் தேற்றமொ டினையன செப்பல் மேயினார். | 22 |
873 | எந்தைதன் செய்கைதோர்ந் தேகு நீயென வெந்திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கவன் நந்திதன் னாணையால் நடுக்க முற்றிவண் வந்தனன் அச்சுறு மனத்த னாகியே. | 23 |
874 | மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம் இன்னினி யேகியே ஈசன் றன்முனம் உன்னருங் காலமொ டுற்ற நங்குறை பன்னுதல் துணிபெனப் பலருங் கூறினார். | 24 |
875 | இவ்வகை யவரெலாம் இசைந்து செம்பொனின் மெய்வரை நீங்கியே வௌ¢ளி வெற்பினில் தெய்வதக் கோயின்முன் சென்று நந்தியை அவ்விடை தொழுதிவை அறைதல் மேயினார். | 25 |
876 | வேறு நந்திந் தேவுகேள் நங்கள்பால் துன்பெலாஞ் சிந்தைசெய் திடுதியத் தேவதே வற்கியாம் வந்தவா றோதியே வல்லைநீ எமையவன் முந்துறக் காட்டெனா முகமனோ டுரைசெய்தார். | 26 |
877 | மற்றிவா றுரைசெய்யும் வானவத் தொகையினை நிற்றிரால் என்றவண் நிறுவியே உறையுள்போய்ச் கற்றைவார் சடைமுடிக் கண்ணுதற் கடவுடன் பொற்றடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான். | 27 |
878 | அண்ணலே உனதுபொன் னடிகளைக் காணிய விண்ணுளோர் யாவரும் வேந்தன்மா லயனொடு நண்ணினா ரென்றலும் நந்தியைத் தெரிகுறீஇத் கண்ணிலா வேணியான் தருதியென் றருள்செய்தான். | 28 |
879 | அருள்புரிந் திடுதலும் ஆதியம் பண்ணவன் திருமலர்த் தாள்களைச் சென்னியிற் சூடியே விரைவுடன் மீண்டுறா வேதன்மா லாதியாஞ் சுரரெலாம் வம்மெனத் தூயவன் கூவினான். | 29 |
880 | கூவியே அருடலுங் கொண்டல்பே ரொலியினால் தாவிலா மகிழ்வுறுஞ் சாதகத் தன்மையாய்ப் பூவினா யகன்முதற் புகலும்வா னவரெலாந் தேவதே வன்முனஞ் செல்லுதல் மேயினார். | 30 |
881 | அம்மையோர் பங்குற அரியணைக் கண்ணுறும் எம்மையாள் இறைவன்முன் னெய்தியே ஆங்கவன் செம்மைசேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்தெழீஇப் பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார். | 31 |
882 | வேறு நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர் வாக்கினும் அமைகிலை மதிப்ப வொண்கிலை நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ ஆகிய மாயமீ தறிகி லேமரோ. | 32 |
883 | இருமையு மொருமையும் இரண்டு மொன்றிய ஒருமையு மன்றென உலகம் யாவையும் பெருமையின் இயற்யி பெரு நின்செயல் அருமறை யானவும் அறிதற் பாலவோ. | 33 |
884 | உருவொடு தொழில்பெய ரொன்று மின்றியே பரவிய நீயவை பரித்து நிற்பது விரவிய வுயிர்க்கெலாம் வீடு தந்திடுங் கருணைய தேயலாற் கருமம் யாவதே. | 34 |
885 | அவ்வுயிர் யாவுநின் னருளி லாவழிச் செய்வினை புரிகில சிறிதும் ஆதலால் வெவ்விய நயப்பொடு வெறுப்பி லாதநீ எவ்வகை யோவுல கியற்றுந் தன்மையே. | 35 |
886 | முன்னதின் முன்னென மொழிது மேயெனிற் பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால் அன்னவை யேயெனில் ஒழிந்த தல்லையோ என்னென நின்னையாம் ஏத்து கின்றதே. | 36 |
887 | புல்லிய புரம்பொடித் ததுவுங் காமனை ஒல்லென எரித்ததும் உனக்குச் சீர்த்தியோ எல்லையில் விதிமுத லெனைத்தும் ஈண்டுநின் நல்லருள் ஆணையே நடாத்து மென்கையால். | 37 |
888 | எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை எங்களை இவ்வர சியற்று வித்தனை எங்களொ டொருவனென் றிருத்தி நின்செயல் எங்களின் அறிவரி தென்று போற்றினார். | 38 |
889 | வேறு அவ்வகை இமர ரெல்லாம் அன்சய் தேத்து மெல்லை மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி நொவ்வுற லெய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட் கின்னே எவ்வர மெனினும் ஈதும் வேண்டிய திசைத்தி ரென்றான். | 39 |
890 | என்றலும் அமரர் சொல்வார் யாமெலா மிந்நாள் காறும் வன்றிறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி நன்றிகொள் தொல் ஆக்கம் நண்ணுவா னாக நின்பால் ஒன்றொரு வரம்வேண் டுற்றாம் அதனியல் புரைத்து மன்றே. | 40 |
891 | மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகும் அம்மையை மணந்த தன்மை ஆங்கவள் இடமா ஈங்கோர் செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட் டுள்ள எம்மையாளு வதற் கேதுக் காட்டிய இயற்கை யல்லால். | 41 |
892 | ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும் ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார். | 42 |
893 | வந்திக்கு மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப் புந்திக்குள் இடர்செய் யற்க புதல்வனைத் தருது மென்னா அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்கு தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான். | 43 |
894 | நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் ணென்ன நீடும் அற்புத நீர ராகி அருள்முறை யுன்னிப் போற்றச் சிற்பரன் றான்கொண் டுள்ள திருமுகம் ஆறு தன்னில் பொற்புறு நுதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான். | 44 |
895 | ஆவதோர் காலை ஈசன் அறுமுக நுதற்கண் மாட்டே மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா வுள்ளோர் ஏவரும் அணுகல் செல்லா எல்லைதீர் வெம்மைத் தாகிப் பூவுல கண்ட முற்றும் பொள்ளெனப் பராய வன்றே. | 45 |
896 | மாதண்டங் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள் கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்துணர் வரிய சோதி வேதண்டம் பரவிற் றென்ன மேதினி சூந்ந்து விண்போய் மூதண்டங் காறுஞ் சென்ற முதல்வன்கண் ணுதலிற் செந்தீ. | 46 |
897 | வேறு மங்கையோர் பங்குடை வள்ளல் ஏந்திய செங்கனல் ஊழியிற் செறிவ தாமென அங்கவன் விழிபொழி அனலம் யாவையும் எங்குள வுலகமும் ஈண்ட லுற்றவே. | 47 |
898 | ஆங்கனந் தழலெழ அகில முற்றுமாய் ஓங்கிய கால்களும் உலைவுற் றோய்ந்தன வாங்கிய திரைக்கடல் வறந்த தாயிடைத் தீங்கனல் வடவையுஞ் செருக்கு நீங்கிற்றால். | 48 |
899 | பக்கன பாரகம் பதலை முற்றுற நெக்கன பணிகள்மெய் நௌ¤த்து நீங்கிய திக்கயம் அரற்றியே தியக்க முற்றன தொக்கன உயிர்தொகை துளக்க முற்றவே. | 49 |
900 | காரண மில்லவன் கண்ணிற் கான்றதீப் பேரருள் புரிந்திடப் பிறந்த பான்மையால் ஓருயிர் தன்மையும் ஒழிவு செய்தில ஆரையும் எவற்றையும் அச்சஞ் செய்தவே. | 50 |
901 | அன்னதன் வெம்மைகண் டமலன் பாங்குறை கன்னியும் வியர்த்தனள் கலங்கி யேயெழீஇப் பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத் தன்தோ ருறையுளைச் சார ஓடினாள். | 51 |
902 | முண்டக னாதியா முன்னர் நின்றுள அண்டர்கள் யாருமவ் வழல்கண் டஞ்சியே விண்டனர் தலைத்தலை வெருவி யோடினார் பண்டெழு விடத்தினாற் பட்ட பான்மைபோல். | 52 |
903 | தீங்கனல் அடர்தலுஞ செம்பொற் கோயிலின் யாங்கணு மாகியே இரிந்த பண்ணவர் வீங்கிய வுயிர்ப்பொடு மீண்டும் எந்தைதன் பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார். | 53 |
904 | வலைத்தலை மானென வன்னி சூழ்ந்துழித் தலைத்தலை இரிந்துளோர் தம்மின் மீள்குறா நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர் கலைத்தனை அகன்றிடாக் காகம் போலவே. | 54 |
905 | தோற்றிய நுதல்விச் சுடரின் சூழ்வினுக் காற்றல ராகியே அடைந்த வானவர் நாற்றடம புயமுடை ஞான நாயகற் போற்றிசெய் தினையன புகல்வ தாயினார். | 55 |
906 | வெந்திற லவுணரை வீட்டு தற்கொரு மைந்தனை அருள்கென வந்து வேண்டினேம் அந்தமிர் அழலைநீ யருடல் செய்தனை எந்தையே எங்ஙனம் யாங்க ளுய்வதே. | 56 |
907 | பங்குறை உமையவள் வாயி யின்வரு கங்கையெவ் புலகமுங் கலந்த தாமென இங்குநின் னுதல்விழி யிருந்து நீங்கிய பொங்கழ லெங்கணும் பொள்ளென் றீண்டியே. | 57 |
908 | கற்றையஞ் சுடர்பொழி கனல்க ளின்றொகை சுற்றியெவ் வுலகமுந் துவன்ற லுற்றவால் மற்றொரு கணத்தவை மாற்றி டாயெனின் முற்றுயிர்த் தொகையையும் முடிவு செய்யுமால். | 58 |
909 | விஞ்சிய பேரழல் வெம்மை யாற்றலா தஞ்சினம் இரிந்தயாம் ஐய நின்னிரு செஞ்சரண் அடைந்தனம் தெரியின் நீயலால் தஞ்சம துளதுகொல் எம்மைத் தாங்கவே. | 59 |
910 | மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும் உலக்குற நீக்குநீ யொல்லை எம்மிடை அலக்கண தியற்றுதி யாயின் அன்னதை விலக்குறு நீரினார் வேற யாவரே. | 60 |
911 | நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும் இறைமுடிக் கின்றவிவ் வெரியை நீக்கியே பிறைமுடிக் கொண்டிடு பெரும எம்முடைக் குறைமுடித் தருளெனக் கூறி வேண்டினார். | 61 |
912 | அஞ்சலி னவர்புகழ் அண்ண லாதியோர் அஞ்சலி செய்திவை யறைந்து வேண்டலும் அஞ்சலி லஞ்சடை யணிந்த நாயகன் அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான். | 62 |
913 | பொன்மலை வில்லினான் புதிதின் வந்திடு தன்முகம் ஐந்தையுங் கரந்து தாவில்சீர் நன்முக மொன்றொடு நண்ணி யத்துணைத் தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான். | 63 |
914 | தன்னருள் நிலைமையாற் சண்மு கத்திடை நன்னுதல் விழிகளின் நல்கு தீப்பொறி இந்நில வரைப்புவான் ஈண்டல் உற்றவை முன்னுற வரும்வகை முதல்வன் முன்னினான். | 64 |
915 | அந்தியம் பெருநிறத் தமலன் அவ்வகை சிந்தைகொண் டிடுவழிச் செறிந்த பேரழன் முந்தையின் வெம்பொறி மூவி ரண்டவாய் வந்து முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான். | 65 |
916 | ஆதகு காலையில் அமரர் தங்களுள் ஓதகு செயலிலா உலவைத் தேவையும் மூதகு தீயையும் முகத்தை நோக்குறா மேதகு கருணையால் விமலன் கூறுவான். | 66 |
917 | நீங்களிச் சுடர்களை நெறியிற் றாங்கியே வீங்குநீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை ஆங்கவள் சரணம் அமர வுய்க்குமால் ஈங்கிது நும்பணி யென்றி யம்பினான். | 67 |
918 | கூற்றுயி ருண்டதாட் குழகன் இவ்வகை சாற்றிய துணர்தலுந் தாழ்ந்து மும்முறை போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர் காற்றொடு கனலிவை கழறல் மேயினார். | 68 |
919 | ஒருநொடி யளவையின் உலகம் யாவுமாய்ப் பெருகிய இத்தழல் பெரும நின்னுடைத் திருவருள் நிலைமையாற் சிறுகிற் றாதலால் அரிதரி தடியரேம் ஆற்ற லாகுமோ. | 69 |
920 | ஈற்றினை யுலகினுக் கிழைக்கு நின்கணே தோற்றிய கனலினைச் சுமத்தற் கோர்கணம் ஆற்றலை யுடையரோ அவனி கேள்வனும் நாற்றிசை முகமுடை நளினத் தேவுமே. | 70 |
921 | பண்டெழு விடத்தினிற் பரந்த தீச்சுடர் கண்டலும் நின்றிலங் கவலுற் றோடினம் அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக் கொண்டனம் ஏகுதல் கூடற் பாலதோ. | 71 |
922 | அப்பெருங் கனலினை அடைதற் குன்னினும் வெப்புறும் எமதுளம் வியர்க்கும் யாக்கையும் எப்பரி சேந்துவம் யாங்கள் என்றலுந் துப்புறழ் படர்சடைப் பகவன் சொல்லுவான். | 72 |
923 | ஒன்றொரு நொடியினின் உலக முற்றுமாய்த் துன்றிய இச்சடர் சுமர்ந்து கங்கையிற் சென்றிட நுங்கள்பால் திண்மை யெய்துக என்றலும் நன்றென இசைந்து போற்றினார். | 73 |
924 | மற்றது தெரிதலும் மால யன்முதற் சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்குறா இற்றது கொல்லெம தின்னல் இன்றெனா உற்றனர் உவகையை யுடலம் விம்மினார். | 74 |
925 | ஆங்கனம் அவர்தமை ஆதி நோக்கியித் தீங்கனல் சரவணஞ் செறிந்தொர் செம்மலாய் ஓங்குபு சூர்கிளைக் கொழிவு செய்யுமால் ஈங்கினி யாவரும் ஏகு வீரென்றான். | 75 |
926 | இறையவன் இனையன இயம்ப உய்ந்தனங் குறையிலம் இனியெனக் கூறிக் கஞ்சமேல் உறைபவ னாதியாம் உம்பர் அன்னவன் அறைகழ லடிதொழு தங்கண் நீங்கினார். | 76 |
927 | முன்னுற மாருதன் முதல்வன் றாள்களை வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ் சென்னியின் மேறகொடு சேறல் மேயினான். | 77 |
928 | அரனுறு கடிநகர் அதனைத் துர்ந்தொராய் எரிகெழு சுடர்முடி யேந்தி மாருதன் வருதலும் அயன்முதல் வானு ளோரெலாங் கருதரு மகிவொடு கண்டு கூறுவார். | 78 |
929 | செந்தழல் மேனியன் தீயின் வண்ணமாத் தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால் உய்ந்திட யாமெலாம் உலகின் முன்னரே வந்திடும் வீரனாம் மதலை மானவே. | 79 |
930 | தொன்னிலை யாம்பெறச் சூரன் பாடுற இன்னமுஞ் சில்பகல் இருத்த லால்அரன் தன்னிகர் திருமகன் சரவ ணத்திடை மன்னுபு குழவியாய் வளர நல்கினான். | 80 |
931 | போற்றலர் புரமடு புனித நாயகன் ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால் ஏற்றதோர் சான்றிவண் எரியைத் தந்ததுஞ் சாற்றருங் கருணையிற் றலைமை யானதே. | 81 |
932 | என்றிவை பற்பல இயம்பி இன்னினிப் பொன்றினர் அவுணர்கள் புலம்பு நங்குறை நன்றிவண் முடிந்தது நாமும் அத்தடஞ் சென்றிடு வாமெனச் செப்பி னாரரோ. | 82 |
933 | உருப்பம தாகிய ஔ¤று தீஞ்சுடர் தரிப்பதோர் மருத்துவன் றம்முன் சென்றிடத் திருப்பயில் மான்முதற் றேவர் வௌ¢ளியம் பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார். | 83 |
934 | இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர் பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன் மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால் திறற்படு வன்னிதன் சென்னி செர்த்தினான். | 84 |
935 | சேர்த்தலும் ஒருபதந் தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய் ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த் தானரோ. | 85 |
936 | கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந் துய்த்திடும் ஆர்சுடர்த் தொகுதிவந் தடைய முவெயில் ஊர்சுடச் சிவந்தகண் ணொருவன் துப்புறழ் வார்சடைக் கரந்தென வறந்த கங்கைநீர். | 86 |
937 | அரனருள் முறையினை யறிந்து கங்கைதன் சிரமிசை யேந்தியே சென்றொர் கன்னலிற் சரவண மெனுந்தடந் தன்னிற் சேர்த்தனன் மரையீத ழாயிடை மல்குற் றாலென. | 87 |
938 | ஆவயின் காறும்வந் தரிய யன்முதல் தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர் மேவர அணியதாம் விளைவு நாடியே காவல்கொள் நிரப்புடைக் காத லோரென. | 88 |
939 | ஆரணன் விண்ணகம் அச்சு தன்புவி வாரணன் முதலிய மாதி ரத்துளோர் ஏரண வமரர்கள் எண்டிக் காதியே சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். | 89 |
940 | வேறு கங்கையு மொல்கப் புக்க கடுங்கனற் கடவுட் சோதி அங்கிரு மூன்று முன்னர் அம்மைவாழ இமையச் சாரற் அங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கட் புங்கவன் அருளாள் தொன்மை போன்றது வறத்த லின்றி. | 90 |
941 | விண்ணிடை யிழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும் வண்ணவொண் கமலஞ் செய்ய முளரியை மாற தாகத் தண்ணரி யோடு நல்கித் தரித்தெனச் சரவ னப்பேர்க் கண்ணகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைச்கொண் டன்றே. | 91 |
942 | அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய. | 92 |
943 | தோன்றல்வந் திடலும் வின்பால் துந்துபி கறங்க லுற்ற ஆனறதொல் மறைக ளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும் வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி ஏன்றெமை யருளு கென்றே ஏத்திசை யெடுத்துச் சூழ்ந்தார். | 93 |
944 | ஏவர்தம் பாலு மின்றி யெல்லைதீர் அமலற் குற்ற மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப் பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகும் ஐயன் ஆவிகள் அருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே. | 94 |
945 | மல்லலம் புவனத் துள்ள மன்னுயிர்க் கணங்கட் கெல்லாம் ஒல்லையின் மகிழ்ச்சி யெய்தி உவகையின் குறிப்புண் டான தொல்லையில் அவுண னாகுஞ் சூரனே முதலா வுள்ள எல்லவர் தமக்கும் மாயும் இருங்குறிப் புற்ற அந்நாள். | 95 |
946 | மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே. | 96 |
947 | பாங்குறு தருச்சூழ் காலாப் ப·றழைச் சினைமென் கொம்பர் நீங்கறப் புடையோய் வானின் நிரந்தரன பந்த ராகத் தூங்கிய பழனுங் காயுந் துணர்களும் அகத்துட் டுன்ன ஆங்கதன் நடுவட் பொய்கை அணிநிழல் அமர்ந்தான் ஐயன். | 97 |
948 | முடிபொறா தசையும் நாகர் முதியகால் பலகை வையந் தொடர்கரை மரனே வானந் தூங்குபன் னாணந் தெண்ணீர்த் தடமலர் பாய லாகச் சரவண மஞ்ச மீதில் அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா னன்றே. | 98 |
949 | எண்பெரு நாகர் சேடன் ஏந்தெழில் அரிமா னாகத் தண்பொலி புனற்பூம் பொய்கை தவிசுரு வாக நாள்கோள் விண்படர் விதான மாக வேலையந் தலைவன் காலை ஒண்பகல் ஆடி காட்ட உமைமகன் அங்கண் உற்றான். | 99 |
950 | தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய்கை தன்னில் விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செவ்வேள் பெருவடி வமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்ணென் றெரிசுடர் விளக்கத் துச்சி இருந்திடும் ஈசன் போன்றான். | 100 |
951 | பெருந்தரை நடுவ ணாகிப் பிறங்கிய சரவ ணத்தில் இருந்தனிக் கமல மொன்றில் குமரவேள் இருந்த பான்மை திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக புரந்தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும். | 101 |
952 | பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக வீசுசை வலங்கா ராக வேறுசூழ் கமல மெல்லாம் மாசறு பகலோ ராக அவற்றிடை மார்ந்த கஞ்சந் தேசுடை இரவி யாகச் சிவனெனச் சேய்அங் குற்றான். | 102 |
953 | மாலயன் எழிலி மேலோன் வானவ ரேனோர் யாரும் பாலுற மரனு மாவும் பறவையும் பிறவுஞ் சூழ ஏலுறு குமரன் கஞ்சத் திருந்தது பரமன் ஆதிக் காலையின் உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும். | 103 |
954 | சலங்கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில் நலங்கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறைமேல் வீட்டிப் புலங்கிளர் உயிர்கள் நல்கப் பொருந்துநற் பகலின் முன்னர் இலங்கெழிற் பதும பீடத் தேறிய இயற்கை போலும். | 104 |
955 | முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ் வண்டுளர் கமலக் காடு வான்புனற் றடத்தின் நிற்றல் அண்டர்கள் முதல்வ ஓர்பால் அன்றியெம் மெல்லாம் பீடங் கொண்டருள் முறையி னென்று நோற்றிடுங் கொள்கைத் தன்றே. | 105 |
956 | அணங்குசெய் தோற்றத் துப்பின் அவிர்சுடர்க் குமரற் சூழ மணங்கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச் சேர்வான் தணங்கெழு புனலிற் புக்குத் தபனன்மேல் நாட்டஞ் சேர்த்தி நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்றவண் நிற்றல் போலும். | 106 |
957 | ஒண்ணகை யுயிர்க்குஞ் சங்க பொருசில கமலம் வைகத் தண்ணுறு நறவைப் ப·றாட டாமரை பரித்துச் சூழ்தல் அண்ணலம் பொய்கை தற்சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப எண்ணெயுஞ் சங்கஞ் சூழ இட்டது போலு மன்றே. | 107 |
958 | ஆரமும் வனசத் தோடும் அணிமக ரந்தச் சேறும் வேரியம் பூந்தண் தேனும் முறைமுறை வீசிக் கையாற் சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல் வாரியந் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும். | 108 |
959 | பங்கயச் செம்மற் போது பதனழிந் தவிழ்ந்து பாங்கர் அங்குள இலைமேல் வீழ அவைபுறத் தசையும் நீர்மை சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும்பூந் தட்டில் துங்கநல் விளக்க மாட்டித் திரைக்கையாற் சுலவல் போலும். | 109 |
960 | காசுறழ் பதுமப் போது களாசிய தாக மீச்செல் பாசடை கவிகை யாகப் பலநனை விளக்க மாக வீசிகள் கவரி யாக மிழற்றுபுள் ளியம தாக மாசறு பொய்கை சேய்க்கு வளம்பட ஒழுகிற் றன்றே. | 110 |
961 | அழல்நிவந் தன்ன கஞ்சத் தகல்தடத் திரைகள் நாப்பண் உழிபட ராது சூழ்போந் துலவுவ தானை நீரால் விழுமிய குமரன் பொய்கை வௌ¤யுறா தமர ரிட்ட எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும். | 111 |
962 | கொன்படை சேவ லாகும் எகினமோர் கோடி ஈசன் தன்பெருங் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை பொன்பிறழ் பதுமன் செய்கை புரியுநாள் ஊர்தி யாவல் என்புடை யிருத்தி யென்றே தமித்தமி இரத்தல் போலும். | 112 |
963 | வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத் தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான் உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ. | 113 |
964 | தீர்த்திகை*க் கங்ககை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல்**நோக்கி ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங் கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார். ( * தீர்த்திகை - தீர்த்தத்தையுடையது. ** குமாரக் கடவுள் பின்னரும் பற்பல திருவிளையாடல்களைச் செய்யப் போகின்றார். ஆதலின், இவ்விளையாட்டை 'முதற்புரியாடல்' என்றார். ) | 114 |
965 | சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத் தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப் போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார். | 115 |
966 | மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும் நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான். ( * ஆரலாகும் மாதர் மூவிருவர் - ஆறு உருவமுடைய கார்த்திகை மாதர்கள். ) | 116 |
967 | ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான். | 117 |
968 | உண்டபின் அறுவ ராகும் ஒருபெரு முதல்வன் றன்னைத் தண்டழை பொதுளும் நீபத் தண்ணிழற் பொய்கை தன்னில் வண்டயி லுறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக் கண்டுயில் செய்வித் தேத்தக் கருணையால் இனைய செய்வான். | 118 |
969 | துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற் பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத் தயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல் இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான். | 119 |
970 | ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். | 120 |
971 | ஆடவோ ருருவம் செங்கை அறையவோ ருருவம் நின்று பாடவோ ருருவம் நாடிப் பார்க்கவோ ருருவம் ஆங்கண் ஓடவோ ருருவம் ஓர்பால் ஔ¤க்கவோ ருருவம் யாண்டுந் தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான். | 121 |
972 | இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில் பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல் வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான். | 122 |
973 | சிற்பர னாகி வந்த செய்யவேள் ஆடற் றன்மை பற்பல திறமும் நாடிப் பங்கயத் தயனு மாலுஞ் சொற்படு மகத்தின் தேவும் முனிவருஞ் சுரரும் யாரும் அற்புத மகிழ்ச்சி கொண்டாங் கின்னவா றறைத லுற்றார். | 123 |
974 | சேயிவன் ஒருவ னேபல் சிறாருருக் கொண்டு நம்முன் ஏயெனு மளவை தன்னில் எண்ணில்பே த்த னாகும் ஆயினிக் குமரன் ஆடல் அறிவரி தெமக்கும் எல்லா மாயமு மியற்ற வல்லன் வரம்பிலா அறிவன் மாதோ. | 124 |
975 | கைப்பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும் இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார் செப்பியென் வேறி யாமுஞ் செய்ததொன் றில்லை அன்னான் ஒப்பறு பரனே ஆம்என் றுரைசெய்து தொழுது நின்றார். | 125 |
976 | அழலெனும் மீன வர்க்கத் தறுவருங்*குமரன் ஆடல் முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக் குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால். ( * அழல் எனும் மீனவர்க்கத்தறுவரும் - கார்த்திகை மாதர்கள் அறுவர்களும். அழல் - கார்த்திகை. ) | 126 |
977 | அம்புயம் உறழுஞ் செங்கேழ் அறுமுகம் படைத்த கோல நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அங்கண் எம்பெரு முதல்வி தன்பால் இலக்கத்தொன் பதின்மர் செவ்வேள் தம்பிய ராகி வந்த தன்மையை விளம்ப லுற்றாம். | 127 |
ஆகத் திருவிருத்தம் - 977
12. துணைவர் வரு படலம் (978 - 1014)
978 | நஞ்ச யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும் வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை செஞ்சி லம்படி தக்கலின் நவமணி சிதற அஞ்சி யோடினள் இத்திற முணர்ந்தனள் அகத்துள். | 1 |
979 | மாய வன்முதல் அமரர்கள் ஈசனை வணங்கி நீயொர் மைந்தனைத் தருகென நெற்றிநாட் டத்தால் ஆய வன்சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான் ஏயி னான்சர வணத்தெனத் தெரிந்தனள் இறைவி. | 2 |
980 | அன்ன தற்பினர் உமையவள் எனதுபால் அமலன் தன்ன ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த பொன்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேளிர் பன்னி யர்க்கெலாம் புதல்வரின் றாகெனப் பகர்ந்தாள். | 3 |
981 | இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டேகிச் சமயம் யாவையும் நிறுவிய கண்ணுதற் றலைவன் அமல மாந்திரு முன்னர்வந் தரிக்குமுன் னரிதாங் கமல மார்அடி கண்டனள் பணிந்துகண் களித்தாள். | 4 |
982 | உம்பர் யாவருங் குறையிரந் திடலுநீ யுதவுஞ் செம்பொ றித்தொகை யாற்றலும் வெம்மையுந் தெரிந்து வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்றிவண் மீண்டேன் எம்பெ ருந்தகை அவ்வழல் நீக்கலா லென்றாள். | 5 |
983 | கன்னி இங்ஙனம் பகர்தலுங் கருணைசெய் தருளித் தன்னி டத்தினில் இருத்தினன் இருந்திடு தையல் முன்னம் ஓடலிற் சிதறுநூ புரமணி முழுதும் என்னை யாளுடை நாயகன் முன்னிலங் கினவால். | 6 |
984 | தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து மிளிரு மந்நவ மணிகளின் ஆணையால் விமலை ஔ¤ரு நல்லுருத் தோன்றின ஐம்முகத் தொருவன் தௌ¤ரு முச்சுடர் அகத்திடை யமர்ந்திடுஞ் செயல்போல். | 7 |
985 | எண்ணி லாநவ மணிகளின் உமையுரு வெனைத்துங் கண்ணி னாற்றெரிந் தருளினால் வம்மெனக் கழற அண்ண லோர்வகை மணிக்கொரு சத்திக ளாக நண்ணி னார்நவ சத்திகள் அமரர்நற் றவத்தால். | 8 |
986 | பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன் திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை விருப்பம் வைத்தலும் முனிவர்தம் மகளிற்போல் விரைவில் கருப்ப முற்றனர் யாவதும் உமையவள் கண்டாள். | 9 |
987 | முனம்பு ரிந்துல களித்தவள் அனையர்பால் முதிருஞ் சினம்பு ரிந்திவண் எமக்குமா றாகிய திறத்தால் கனம்பு ரிந்தஇக் கருப்பமோ டிருத்திர் பல்காலம் இனம்பு ரிந்தநீர் யாவரு மென்றுசூள் இசைத்தாள். | 10 |
988 | ஆவ தெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண் மேவு மாதர்மெய் வியர்த்தனர் அவியிர்ப் பதனில் தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல் ஒவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார். | 11 |
989 | வடுத்த னைப்பொருங் கண்ணினர் வியர்ப்பினில் வந்தாங் கடுத்த மானவர் ஓரிலக் கத்தரும் அசனி கடுத்த சொல்லினர் பொற்றுகி லுடையினர் கரத்தில் எடுத்த வாளினர் பலகைய ராகிஈண் டினரால். | 12 |
990 | அனையர் யாவரும் ஈசனை யடைந்தனர் அன்புற் றினிய வாகிய அமலன்நா மங்களை யேத்தி வனைக ருங்கழல் வணங்கிமுன் நிற்றலும் மற்றப் புனித நாயகன் அவர்தமை நோக்கியே புகல்வான். | 13 |
991 | மைந்தர் கேண்மினோ நீவிர்கள் யாவரும் வயத்தால் இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது கந்த வேள்படை யாகுதிர் என்னவே கழறி முந்து பேரருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். | 14 |
992 | இன்ப நீருடன் இவையருள் புரிதலும் இலக்கம் நன்பெ ருந்திறல் மைந்தர்க ளாயினோர் நாளும் அன்பு மேதகு பரிசன ராகியே அமலன் முன்பு நீங்கலா தொழுகினர் செய்பணி முறையால். | 15 |
993 | மாற்ற ருஞ்சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத் தோற்று நன்மணி யுருவமாந் தோகையர் துளங்கிப் போற்றி வந்தனை செய்துபின் அவள்பணி புரிந்தே ஆற்று தொல்கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார். | 16 |
994 | இகலு மாமணி மகளிர்தங் கருவினுள் இறைவற் புகழும் நந்தியங் கணத்தவர் குழவியாய்ப் போந்து நிகரில் காளைய ராகிவீற் றிருந்தனர் நெறிசேர் சுகன்எ னும்படி பரமனை முன்னியே தொழுது. | 17 |
995 | அரத னங்களில் தோன்றிய மங்கையர் அகட்டிற் கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப் புரியும் யோகுட னிருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப் பரம தாதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார். | 18 |
996 | இருவர் தம்மையும் பணிந்தவர் இன்றுகா றினைய கருவின் நொந்தனம் இன்னினி யாம்பரிக் கல்லேம் அருள்பு ரிந்திடு மென்றலும் ஆதியங் கடவுள் பரிவி னால்உமை திருமுகம் நோக்கியே பகர்வான். | 19 |
997 | ஏல வார்குழற் கவுரிநின் செய்யதா ளிடையிற் சாலு நூபுரத் துதித்தவர் உனதுசா பத்தாற் சூலி னான்மிக மெலிந்தனர் பற்பகல் சுமந்தார் பால ரைப்பெற இனியருள் புரிகெனப் பணிந்தான். | 20 |
998 | இறைவன் இங்கிது பணித்தலும் நன்றென இசையா முறுவல் செய்துமை மாதரை நோக்கிமொய்ம் பினரைப் பெறுதி ரால்இனி யென்றலும் அவர்வயிற் பெயரா துறையும் யோகுடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார். | 21 |
999 | மறத்த லில்லதோ ருணர்வுடை வீரர்கள் மற்றித் திறத்தை நாடியே யோகுவிட் டுளமகிழ் சிறப்ப இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப் பிறத்த லுன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார். | 22 |
1000 | பரிபு ரந்தனின் முன்வரு மங்கையர் பரைதன் கருணை கொண்டசொற் கேட்டலுங் கவற்சியை அகன்று விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண் டொருவி மைந்தரை அளித்தனர் யாவரு மொருசார். | 23 |
1001 | நந்தி தண்கண முதல்வர் களாகியே நணியோர் பந்த நீங்கியே சனித்தனர் ஒன்றிலாப் பதின்மர் எந்தை யாரருள் பெயர்கொடே இருநில வரைப்பில் சுந்த ரன்விடை முகத்தவன் றோன்றிய வாபோல். | 24 |
1002 | பேர ஆகுவை யுடையவன் இளவல்பே ரருளால் சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான் கூர வாகுறுஞ் செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப. | 25 |
1003 | விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படையாங் கரள வல்லிருள் அகற்றுவான் எழுந்தவெண் கதிர்போல் திரள வல்லினை அனையபூண் முலையுடைத் தெய்வத் தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே. | 26 |
1004 | மக்கள் வானவர்க் கருந்துயர் புரியும்வல் லவுணர் தொக்க வீரமா மகேந்திரப் பெருவளந் தொலையச் செக்கர் நூபுரப் புட்பரா கத்திபாற் சிறப்பால் தக்க வீரமா மகேந்திரன் வந்தவ தரித்தான். | 27 |
1005 | ஆத வத்தனிக் கடவுளும் வடவையா ரழலுஞ் சீத ளப்புது மதியமும் வௌ¢குறத் திகழ்கோ மேத கத்தமர் பாவைபால் விண்ணவர் புரியும் மாத வத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான். | 28 |
1006 | தான மாநிலத் தேவர்கள் மகிழ்வுறத் தகுவ ரான பேரெலா முடிவுற அறந்தலை யெடுப்பக் கானல் பேர்வயி டூரிய மின்னிடைக் கழற்கால் மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான். | 29 |
1007 | சூர ராக்கமுந் துணைவர்தம் மாக்கமுஞ் சூழுந் தீர ராக்கமும் வானவ ரேக்கமுஞ் சிதைய வார ராக்கமழ் கொன்றைவே ணியன்அரு ளதனால் வீர ராக்கதன் வந்தனன் வயிரமெல் லியல்பால். | 30 |
1008 | கரக தத்தனி மால்வரை எடுத்தொரு கணத்தில் புரக தத்தினை இழைத்தவன் அருளினாற் புணரிக் குரக தத்திடைப் பைங்கனல் கொம்மென எழல்போல் மரக தத்திபால் வீரமார்த் தாண்டன் வந்தனனே. | 31 |
1009 | மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித்தேர் வெய்ய தானவர் ப·றொகை இமைப்பினில் விளிய மொய்யி னார்த்தடு மானவன் பவளமா மொழிப்பேர்த் தையல் தன்வயின் வலியவீ ராந்தகன் சனித்தான். | 32 |
1010 | கந்து தித்திடும் வியன்நர மடங்கலுங் கடலின் முந்து தித்திடும் ஆலமும் வடவையும் முரண நந்து தித்தநற் களமணிப் பாவைநற் றவத்தால் வந்து தித்தனன் வீரதீ ரப்பெயர் வலியோன். | 33 |
1011 | இந்த வீரரொன் பதின்மரும் ஈசன தருளால் தந்தம் அன்னையர் நிறங்கொடே பொலந்துகில் தாங்கி வந்து பற்பகல் வளர்தரும் உறுப்பொடு மடவார் உந்தி யின்வழி நான்முகத் தண்ணல்போல் உதித்தார். | 34 |
1012 | வேறு உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுட னுறைந்த நாதன், பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி, மதியுடையர் திறலுடையர் மானவருங் கலத்தினர்நம் மைந்தர் இன்னோர், புதியரலர் நந்திதனிக் கணத்தவரென் றான்சுருதிப் பொருளாய் நின்றான். | 35 |
1013 | தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாஞ் சிவன் வெவ்வேறு, தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கந் தனயரோடு, நீவிர்களு மொன்றிநுங்கட் கிறையவனா கியசேயை நீங்க லின்றி, ஏவலன் பணித்தனசெய் தொழுகுதிரென் றான்அவரும் இசைந்து தாழ்ந்தார். | 36 |
1014 | ஓன்பானாம் இலக்கத்தோர் ஓரிலக்கத் தோர்தம்மோ டொன்றிப் புல்லி, அன்பாகி எம்பெருமான் சினகரத்தை அகலாமல் அங்கண் வைக, மென்பானல் புரையும்விழிச் சத்திகளொன் பதின்மர்களும் விமலக் கன்னி, தன்பாலை யிகவாமல் அவள்பணித்த தொழில்பரிந்து சார்த லுற்றார். | 37 |
ஆகத் திருவிருத்தம் - 1014.
13. சரவணப் படலம் (1015 - 1051)
1015 | ஏற்ற மானவர் ஒன்றொழி பதின்மரோ டிலக்கர் தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம் ஆற்றல் சேர்புனற் சரவணத் தடந்தனில் அறுவர் போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம். | 1 |
1016 | தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வௌ¢ளிப் பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர் கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப் பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான். | 2 |
1017 | பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச் செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை இம்ம லைக்கணே உய்க்குதும் வருகென இசைத்தான். | 3 |
1018 | வேறு செமபுலி யதளினான் செப்பிற் றோர்தலும் அம்பிகை யுவகையோ டன்பு கொண்டேழீஇ நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும் எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றாள். | 4 |
1019 | கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா மைம்மலி மிடறுவடை வான நாயகன் இம்மென அவளொடும் ஏற தேறினான். | 5 |
1020 | நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு நந்திவந் திடுதலும் நாக மேலுளார் நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார். | 6 |
1021 | அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச் கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர் எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர் வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார். | 7 |
1022 | ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத் தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால் கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன் நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார். | 8 |
1023 | சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி கல்லென இரங்குறு கரடி காகளஞ் செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம் பல்லியம் இயம்பின பாரி டங்களே. | 9 |
1024 | வேறு வேத நான்குங் குடிலையும் வேறுள பேத மாய கலைகளும் பேரிசை நாத மோடு நணுகின விஞ்சையர் கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். | 10 |
1025 | வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக் கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல் வௌ¢ளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார். | 11 |
1026 | சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப் பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும் நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப் புகரில் சாமரம் பூதர்கள் வீசினர். | 12 |
1027 | சீறு மால்கரி சீயம் வயல்புலி ஏறு பூட்கை இரலையெண் கேமுதல் வேறு கொண்ட வியன்முகச் சாரதர் நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினர். | 13 |
1028 | இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந் திமில விண்புனல் நக்கிச் சிதறுவ அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால் கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே. | 14 |
1029 | அன்ன காலை அகிலமும் ஈன்றருள் கன்னி தன்னொடு காமர்வௌ¢ ளேற்றின்மேல் மன்னி வைகு மதிமுடி வானவன் தன்ன தாலயத் தைத்தணந் தேகினான். | 15 |
1030 | வேறு தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான் என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும். | 16 |
1031 | பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரிய துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து நிறையும் வான்புனற் பொய்கையங் கரையிடை நின்றார். | 17 |
1032 | முண்ட கச்சர வணந்தனில் மூவிரு வடிவங் கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன் அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக் கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான். | 18 |
1033 | அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன் இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச் சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள். | 19 |
1034 | சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள். | 20 |
1035 | எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன்றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன். | 21 |
1036 | முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தன தலையாம் அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ. | 22 |
1037 | ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி. | 23 |
1038 | கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென் றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும் அங்கை யாலவன் றனைஎடுத் தகலமேல் அணைத்துப் பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில். | 24 |
1039 | அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப் பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி இருத்தி னான்தன தடந்தனில் எம்மையாள் இறைவன். | 25 |
1040 | கூல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும். | 26 |
1041 | வேறு விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய் இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர் கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப் புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார். | 27 |
1042 | காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத் தோமாரில் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால் யாமாரினும் இழுக்குற்றனனம் எமையாள்இனி யென்னாப் பூமாரிகள பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார். | 28 |
1043 | வாரற்பத முறவீங்கிய வன்னத்தன முருந்தின் மூரற்பவ ளச்சேயிதழ் முழுமாமதி வதனத் தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன் பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான். | 29 |
1044 | கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும் நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர் தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். | 30 |
1045 | என்னாவருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத் தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால் பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே. | 31 |
1046 | வானார்சுர நதிபோற்சர வணத்தூடவை புகலுந் தூநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால் மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார். | 32 |
1047 | கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும் அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார் துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால். | 33 |
1048 | அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன் முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ டென்னாவுரை பெறுகுன்றிடை இருந்தேதவம் புரிமின் சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான். | 34 |
1049 | நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன் விடை பெற்றே சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப் பொன்றாழ்சடை யினன்வௌ¢ளியம் பொருப்பின்றலை புக்கான். | 35 |
1050 | அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய் விடையூர்தியின் இழிந்தெதனி விறற்சேயொடும் வெற்பின் மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தலையின் இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே. | 36 |
1051 | சேயோனெனும் முன்னோன் றனைச் சிலம்பின்வரும் ஒன்பான் மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத் தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார். | 37 |
ஆகத் திருவிருத்தம் - 1051
14. திருவிளையாட்டுப் படலம் (1052 - 1179)
1052 | அனந்தரம தாகஉமை யம்மையொடு பெம்மான் நனந்தலையில் வைகிய நலங்கொள்கும ரேசன் இனங்கொடு தொடர்ந்தஇளை யாரொடு மெழுந்தே மனங்கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான். | 1 |
1053 | தட்டைஞெகி ழங்கழல் சதங்கைகள் சிலம்பக் கட்டழகு மேயஅரை ஞாண்மணி கறங்க வட்டமணி குண்டல மதாணிநுதல் வீர பட்டிகைமி னக்குமரன் ஆடல்பயில் கின்றான். | 2 |
1054 | மன்றுதொறு லாவுமலர் வாவிதொ றுலாவுந் துன்றுசிறு தென்றல்தவழ் சோலைதொ றுலாவும் என்றுமுல வாதுலவும் யாறுதொ றுலாவுங் குன்றுதொறு லாவுமுறை யுங்குமர வேளே. | 3 |
1055 | குளத்தினுல வும்நதி குறைந்திடு துருத்திக் களத்தினுல வும்நிரைகொள் கந்துடை நிலைத்தாந் தளத்தினுல வும்பனவர் சாலையுல வும்மென் னுளத்தினுல வும்சிவன் உமைக்கினைய மைந்தன். | 4 |
1056 | இந்துமுடி முன்னவன் இடந்தொறு முலாவும் தந்தையுடன் யாயமர் தலங்களி னுலாவும் கந்தமலர் நீபமுறை கண்டொறு முலாவும் செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி யுலாவும். | 5 |
1057 | மண்ணிடை யுலாவும்நெடு மாதிர முலாவும் எண்ணிடை யுறாதகடல் எங்கணு முலாவும் விண்ணிடை யுலாவும்மதி வெய்யவன் உடுக்கோள் கண்ணிடை யுலாவும்இறை கண்ணில்வரு மண்ணல். | 6 |
1058 | கந்தருவர் சித்தர்கரு டத்தொகைய ரேனோர் தந்தமுல காதிய தலந்தொறு முலாவும் இந்திரன் இருந்ததொல் லிடந்தனில் உலாவும் உந்துதவர் வைகுமுல கந்தொறு முலாவும். | 7 |
1059 | அங்கமல நான்முகன் அரும்பத முலாவும் மங்கலம் நிறைந்ததிரு மால்பத முலாவும் எங்கள் பெருமாட்டிதன் இரும்பத முலாவும் திங்கள்முடி மேற்புனை சிவன்பத முலாவும். | 8 |
1060 | இப்புவியில் அண்டநிரை யெங்கணு முலாவும் அப்புவழ லூதைவௌ¤ அண்டமு முலாவும் ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவுஞ் செப்பரிய ஒர்பரசி வன்றனது மைந்தன். | 9 |
1061 | வேறு இருமூவகை வதனத்தொடும் இளையோனெனத் திரியும் ஒருமாமுக னொடுசென்றிடும் உயர்காளையி னுலவும் பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந் தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள். | 10 |
1062 | காலிற்செலும் பரியிற்செலும் கரியிற்செலும் கடுந்தேர் மேலிற்செலும் தனியாளியின் மிசையிற்செலும் தகரின் பாலிற்செலும் மானத்திடை பரிவிற்செலும் விண்ணின் மாலிற்செலும் பொருசூரொடு மலையச்செலும் வலியோன். | 11 |
1063 | பாடின்படு பணியார்த்திடும் பணைமென்குழல் இசைக்கும் கோடங்கொலி புரிவித்திடும் குரல்வீணைகள் பயிலும் ஈடொன்றிய சிறுபல்லிய மெறியும்மெவ ரெவரும் நாடும்படி பாடுங்களி நடனஞ்செயும் முருகன். | 12 |
1064 | இன்னேபல வுருவங்கொடி யாண்டுங்கும ரேசன் நன்னேயமொ டாடுற்றுழி நனிநாடினள் வியவா முன்னேயுல கினையீன்ளவள் முடிவின்றுறை முதல்வன் பொன்னேர்கழ விணைதாழ்ந்தனள் போற்றிப்புகல் கின்றாள். | 13 |
1065 | கூடுற்றநங குமரன்சிறு குழவிப்பரு வத்தே ஆடற்றொழி லெனக்கற்புத மாகும்மவன் போல்வார் நேடிற்பிற ரிலைமாயையின் நினைநேர்தரு மனையான் பீடுற்றிடு நெறிதன்னையெம் பெருமான்மொழி கென்றாள். | 14 |
1066 | அல்லார்குழ லவள் இன்னணம் அறியர்களின் வினவ ஒல்லார்புர மடுகண்ணுதல் உன்றன்மகன் இயல்பை எல்லாவுயிர் களுமுய்ந்திட எமைநீகட வினையால் நல்லாய்இது கேண்மோவென அருளாலிவை நவில்வான். | 15 |
1067 | வேறு ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன் கங்கை தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுத லாலே காங்கெயன் எனப்பேர் பெற்றான் காமர்பூஞ் சரவ ணத்தின் பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான். | 16 |
1068 | தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான் சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீ யொன்றாச் செய்தாய் ஆயத னாலே கந்த னாமெனு நாமம் பெற்றான். | 17 |
1069 | நன்முகம் இருமூன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன் தன்முக மாகியுற்ற; தாரகப் பிரம மாகி முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்றாய் உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே. | 18 |
1070 | ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதக மன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். | 19 |
1071 | மேலினி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக் கெல்லாம் மூலம தாகி நின்ற மொழிப்பொருள் வினவி அன்னான் மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே ஞாலமன் னுயிரை யெலலா நல்கியே நண்ணும் பன்னாள். | 20 |
1072 | தாரகன் றன்னைச் சீயத் தடம்பெரு முகத்தி னானைச் சூரபன் மாவை ஏனை யவுணரைத் தொலைவு செய்தே ஆரணன் மகவான் ஏனை யமரர்கள் இடுக்கண் நீக்கிப் பேரருள் புரிவன் நின்சேய் பின்னர்நீ காண்டி யென்றான். | 21 |
1073 | என்றலும் இளையோன் செய்கை எம்பெரு மாட்டி கோள நன்றென மகிழ்ச்சி கொண்டு நணுகலும் உலக மெல்லாஞ் சென்றரு ளாடல் செய்யுந் திருத்தகு குமரன் பின்னர் ஒன்றொரு விளையாட் டுள்ளத் துன்னியே புரித லுற்றான். | 22 |
1074 | குலகிரி யனைத்து மோர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த் தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா அலைகடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி வெற்பைப் பிலனுற அழுத்துங் கங்கைப் பெருநதி யடைக்கு மன்னோ. | 23 |
1075 | இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப் பொருள்கெழு மேரு வாதி அடுக்கலிற் பூட்டி வீக்கி அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும். | 24 |
1076 | ஆசையங் கரிகள் தம்மை அங்கைகொண் டொன்றோ டொன்று பூசல்செய் விக்கும் வானிற் போந்திடுங் கங்கை நீரால் காய்சின வடவை மாற்றுங் கவின்சிறைக் கலுழ னோடு வாசுகி தன்னைப் பற்றி மாறிகல் விளைக்கு மன்றே. | 25 |
1077 | பாதல நிலயத்துள்ள புயங்கரைப் படியிற் சேர்த்திப் பூதல நேமி யெல்லாம் புகுந்திடப் பிலத்தி னுய்க்கும் ஆதவ முதல்வன் றன்னை அவிர்மதிப் பதத்தி லோச்சுஞ் சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும். | 26 |
1078 | எண்டிசை புரந்த தேவர் இருந்ததொல் பதங்க ளெல்லாம் பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்குங் கொண்டலி னிருந்த மின்னின் குழுவுடன் உருமுப பற்றி வண்டின முறாத செந்தண் மாலைசெய் தணியு மன்றே. | 27 |
1079 | வெய்யவர் மதிகோள் ஏனோர் விண்படர் விமானந் தேர்கள் மொய்யுறப் பிணித்த பாசம் முழுவதுந் துருவ னென்போன் கையுறு மவற்றில் வேண்டுங் கயிற்றினை இடைக்கண் ஈர்ந்து வையகந் திசைமீச் செல்ல வானியில் விடுக்கு மைந்தன். | 28 |
1080 | வடுத்தவிர் விசும்பிற் செல்லும் வார்சிலை யிரண்டும் பற்றி உடுத்திரள் பலகோ ளின்ன உண்டையாக் கொண்டு வானோர் முடித்தலை யுரந்தோள் கண்ட முகம்படக் குறியா வெய்தே அடற்றனு விஞ்சை காட்டும் ஆறிரு தடந்தோள் அண்ணல். | 29 |
1081 | இத்திறம் உலகந் தன்னில் இம்பரோ டும்பர் அஞ்சிச் சித்தமெய் தளர்த லன்றிச் சிதைவுறா வகைமை தேர்ந்து வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு புரிந்தான் ஆவி முத்தர்தம் விழியின் அன்றி முன்னுறா நிமல மூர்த்தி. | 30 |
1082 | அயது காலை ஞாலத் தவுணர்கள் அதனை நோக்கி ஏயிது செய்தார் யாரே யென்றுவிம் மிதராய் எங்கள் நாயகன் வடிவந் தன்னை நனிபெரும் பவத்துட் டங்குந் தீயவ ராத லாலே கண்டிலர் தியக்க முற்றார். | 31 |
1083 | சிலபகல் பின்னும் வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டே உலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத் தன்மெய் நிலைமைகாட் டாது செவ்வேள் நிலாவலும் நேடி யன்னோர் மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய தென்றார். | 32 |
1084 | ஆயதோர் குமரன் செய்கை அவனியின் மாக்கள் காணாத் தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண ரெல்லாம் மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாக மேயின விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார். | 33 |
1085 | புவனியின் மாக்க ளின்ன புகறலுந் திசைகாப் பாளர் தவனனே மதிய மேனோர் சண்முகன் செய்கை நாடி அவனுரு வதனைக் காணார் அவுணர்தம் வினையு மன்றால் எவரிது செய்தார் கொல்லென் றிரங்கினர் யாருங் கூடி. | 34 |
1086 | தேருறு மனைய தேவர் தேவர்கோன் சிலவ ரோடு மேருவி லிருந்தான் போலும் வேதனும் அங்கண் வைகும் ஆருமங் கவர்பா லேகி அறைகுது மென்று தேறிச் சூரர்கோன் றனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்த லுற்றார். | 35 |
1087 | வடவரை யும்பர் தன்னில் வானவ ரானோ ரேகி அடைதரு கின்ற காலை ஆறுமா முகங்கொண் டுள்ள கடவுள்செய் யாடல் நோக்கி அவனுருக் காணா னாகி இடருறு மனத்தி னோடும் இருந்தஇந் திரனைக் கண்டார். | 36 |
1088 | அரிதிரு முன்ன ரெய்தி அடிதொழு தங்கண் வைகி விரிகட லுலகின் வானின் மேஹவதொன் னிலைமை யாவுந் திரிபுற வெவரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது புரிகலர் அவுணர் போலும் புகுந்தஇப் புணர்ப்பென் னென்றார். | 37 |
1089 | வானவர் இறைவன் அன்னோர் மாற்றமங் கதனைக் கேளா யானுமிப் பரிசு நாடி யிருந்தனன் இறையுந் தேரேன் ஆனதை யுணர வேண்டின் அனைவரு மேகி அம்பொன் மேனிகொள் கமலத் தோனை வினவுதும் எழுதி ரென்றான். | 38 |
1090 | எழுதிரென் றுரைத்த லோடும் இந்திரன் முதலா வுள்ளோர் விழியிடைத் தெரிய அன்னோர் மெய்த்தவம் புரிந்த நீரால் அழிவற வுலகி லாடும் அறுமுகன் வதன மொன்றில் குழவிய தென்ன அன்ன குன்றிடைத் தோன்றி னானால். | 39 |
1091 | வாட்டமொ டமரர் கொண்ட மயக்கறத் தனாது செய்கை காட்டிய வந்தோன் மேருக் கனவரை யசைத்துக் கஞ்சத் தோட்டிதழ் கொய்து சிந்துந் துணையென உயர்ந்த செம்பொற் கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவி யேபோல். | 40 |
1092 | தோன்றிய குமரன் றன்னைச் சுரபதி சுரரா யுள்ளோர் ஆன்றதோர் திசைகாப் பாளர் அனைவருந் தெரிகுற் றன்னோ வான்தரை திரிபு செய்தோன் மற்றிவ னாகு மென்னாக் கான்திரி அரியை நேரும் விலங்கெனக் கலங்கிச் சொல்வார். | 41 |
1093 | வேறு நொய்தாங் குழவி யெனக்கொள்கிலம் நோன்மை நாடின் வெய்தாம் அவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும் எய்தாத மாயம் உளனால்இவன் றன்னை வெம்போர் செய்தாடல் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார். | 42 |
1094 | சூழுற்ற வெல்லை இமையோர்க்கிறை தொல்லை நாளில் காழுற்ற தந்தம் அறவேகிவெண் காட்டில் ஈசன் கேழுற்ற தாள்அர்ச் சனைசெய்து கிடைத்து வைகும் வேழத்தை உன்ன அதுவந்தது மேரு வின்பால். | 43 |
1095 | தந்தங்கள் பெற்று வருகின்ற தனிக்க ளிற்றின் கந்தந் தனில்போந் தடல்வச்சிரங் காமர் ஔ¢வாள் குந்தஞ் சிலைகொண் டிகல்வெஞ்சமர்க் கோல மெய்தி மைந்தன் றனைவா னவரோடும் வளைந்து கொண்டான். | 44 |
1096 | வன்னிச் சுடர்கால விசையோடு மரீஇய பாங்கிற் பன்னற் படுகுன் றவைசூழ்தரு பான்மை யேபோல் உன்னற் கரிய குமரேசனை உம்பர் கோனும் இன்னற் படுவா னவரும்மிகல் செய்ய வுற்றார். | 45 |
1097 | தண்ணார் கமலத் துணைமாதரைத் தன்னி ரண்டு கண்ணா வுடைய உமையாள்தரு கந்தன் வானோர் நண்ணா ரெனச்சூழ் வதுநோக்கி நகைத்தி யாதும் எண்ணாது முன்போல் தனதாடல் இழைத்த வேலை. | 46 |
1098 | எட்டே யொருபான் படைதம்முள் எறிவ வெல்லாந் தொட்டே கடவுட் படைதன்னொடுந் தூர்த்த லோடும் மட்டேறு போதிற் கடுகின்றுழி வச்சி ரத்தை விட்டே தெழித்தான் குமரன்மிசை வேள்வி வேந்தன். | 47 |
1099 | வயிரத் தனிவெம் படையெந்தைதன் மார்பு நண்ணி அயிரிற் றுகளாய் விளிவாக அதனை நோக்கித் துயரத் தழுங்க இமையோரிறை தொல்லை வேழஞ் செயிருற் றியம்பி முருகேசன்முன் சென்ற தன்றே. | 48 |
1100 | செல்லுங் கரிகண் டுமையாள்மகன் சிந்தை யாலோர் வில்லுங் கணைகள் பலவும் விரைவோடு நல்கி ஒல்லென் றிடநா ணொலிசெய்துயர் சாபம் வாங்கி எல்லொன்று கோலொன் றதன்நெற்றியுள் ஏக வுய்த்தான். | 49 |
1101 | அக்கா லையில்வேள் செலுத்துங்கணை அண்டர் தம்மின் மிக்கான் அயிரா வதநெற்றியுள் மேவி வல்லே புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி வீழா மைக்கார் முகில்அச் சுறவேயது மாண்ட தன்றே. | 50 |
1102 | தன்னோர் களிறு மடிவெய்தலுந் தான வேந்தன் அன்னோ வெனவே இரங்கா அயல்போகி நின்று மின்னோ டுறழ்தன் சிலைதன்னைம வெகுண்டு வாங்க முன்னோன் மதலை பொருகோலவன் மொய்ம்பி லெய்தான். | 51 |
1103 | கோலொன்று விண்ணோர்க் கிறைமேல்கும ரேசன் உய்ப்ப மாலொன்று நெஞ்சன் வருந்திப்பெரு வன்மை சிந்திக் காலொன்று சாபத் தொழில்நீத்தனன் கையி லுற்ற வேலொன் றதனைக் கடிதேகுகன் மீது விட்டான். | 52 |
1104 | குந்தப் படையோர் சிறுபுற்படு கொள்கை யேபோல் வந்துற் றிடஅற் புதமெய்தினர் மற்றை வானோர் கந்தக் கடவுள் சிலையிற்கணை யொன்று பூட்டித் தந்திக் கிறைவன் தடம்பொன்முடி தள்ளி ஆர்த்தான். | 53 |
1105 | துவசந் தனையோர் கணைகொண்டு துணித்து மார்பிற் கவசந் தனையோர் கணையால்துகள் கண்டு விண்ணோன் அவசம் படஏழ் கணைதூண்டினன் ஆழி வேண்டிச் சிவசங் கரஎன் றரிபோற்றிய செம்மல் மைந்தன். | 54 |
1106 | தீங்கா கியவோ ரெழுவாளியுஞ் செல்ல மார்பின் ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி வீழ்ந்தான் ஓங்கார மேலைப் பொருள்மைந்தனை உம்ப ரேனோர் பாங்காய் வளைந்து பொருதார்படு கின்ற தோரார். | 55 |
1107 | இவ்வா றமரர் பொருமெல்லையில் ஈசன் மைந்தன் கைவார் சிலையைக் குனித்தேகணை நான்கு தூண்டி மெய்வா ரிதிகட் கிறைவன்றனை வீட்டி மற்றும் ஐவா ளியினால் சமன்ஆற்றல் அடக்கி னானால். | 56 |
1108 | ஒரம் பதனால் மதிதன்னையும் ஒன்றி ரண்டு கூரம் பதனாற் கதிர்தன்னையும் கோதில் மைந்தன் ஈரம் பதனால் அனிலத்தையும் மேவு மூன்றால் வீரம் பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான். | 57 |
1109 | நின்றார் எவருங் குமரேசன் நிலைமை நோக்கி இன்றா ரையுமற் றிவனேயடு மென்று தேறி ஒன்றான சிம்புள் விறல்கண்டரி யுட்கி யோடிச் சென்றா லெனவே இரிந்தோடினர் சிந்தை விம்மி. | 58 |
1110 | ஓடுஞ் சுரர்கள் திறநோக்கி உதிக்கும் வெய்யோன் நீடுங் கதிர்கள் நிலவைத்துரக் கின்ற தேபோல் ஆடுங் குமரன் அவரைத்துரந் தண்டர் முன்னர் வீடுங் களத்தி னிடையேதனி மேவி நின்றான். | 59 |
1111 | ஒல்லா தவரிற் பொருதேசில உம்பர் வீழ நில்லா துடைந்து சிலதேவர்கள் நீங்க நேரில் வில்லா ளியாகித் தனிநின்ற விசாகன் மேனாள் எல்லா ரையும்அட் டுலவும்தனி ஈசன் ஒத்தான். | 60 |
1112 | வேறு சுரர்கள் யாருந் தொலைந்திட வென்றுதான் ஒருவ னாகி உமைமகன் மேவுழி அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான் குருவை யெய்திப் புகுந்தன கூறினான். | 61 |
1113 | நற்ற வம்புரி நாரதன் கூற்றினை அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ இற்ற தேகொல் இமையவர் வாழ்வெனாச் சொற்று வல்லை துயருழந் தேகினான். | 62 |
1114 | ஆத பன்மதி அண்டர் தமக்கிறை மாதி ரத்தவர் மால்கரி தன்னுடன் சாதல் கொண்ட சமர்க்களந் தன்னிடைப் போதல் மேயினன் பொன்னெனும் பேரினான். | 63 |
1115 | ஆவி யின்றி அவர் மறி குற்றது தேவ ராசான் தெரிந்து படருறாத் தாவி லேர்கெழு சண்முகன் அவ்விடை மேவி யாடும் வியப்பினை நோக்கினான். | 64 |
1116 | முழுது ணர்ந்திடு மொய்சுடர்ப் பொன்னவன் எழுதொ ணாத எழில்நலந் தாங்கியோர் குழவி தன்னுருக் கொண்ட குமரனைத் தொழுது நின்று துதித்திது சொல்லுவான். | 65 |
1117 | வேறு கரியரி முகத்தினன் கடிய சூரனென் றுரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும் பருவரல் உழந்துதன் பதிவிட் டிப்பெரு வரையிடை மகபதி மறைந்து வைகினான். | 66 |
1118 | அன்னவன் நின்னடி அடைந்து நிற்கொடே துன்னலர் தமதுயிர் தொலைத்துத் தொன்மைபோல் தன்னர செய்தவுந் தலைவ னாகவும் உன்னினன் பிறிதுவே றொன்றும் உன்னலான். | 67 |
1119 | பற்பகல் அருந்தவம் பயின்று வாடினன் தற்பர சரவணத் தடத்திற் போந்தவுன் உற்பவம் நோக்கியே உவகை பூத்தனன் சொற்படு துயரெலாந் தொலைத்து ளானென. | 68 |
1120 | கோடலும் மராத்தொடு குரவுஞ் செச்சையுஞ் சூடிய குமரநின் றொழும்பு செய்திட நேடுறும் இந்திரன் நீயித் தன்மையின் ஆடல்செய் திடுவரை அறிகி லானரோ. | 69 |
1121 | நாரணன் முதலினோர் நாடிக் காணொணா ஆரண முதல்வனும் உமையும் அன்னவர் சீரரு ளடைந்தனர் சிலரும் அல்லதை யாருன தாடலை அறியும் நீரினார். | 70 |
1122 | பற்றிய தொடர்பையும் உயிரை யும்பகுத் திற்றென வுணர்கிலம் ஏதந் தீர்கிலஞ் சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமெலாம் உற்றுன தாடலை உணர வல்லமோ. | 71 |
1123 | ஆதலால் வானவர்க் கரசன் ஆற்றவும் ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத் தீதெனா வுன்னிவெஞ் செருவி ழைத்தனன் நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை. | 72 |
1124 | மற்றுள தேவரும் மலைந்து தம்முயிர் அற்றனர் அவர்களும் அறிவி லாமையால் பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச் செற்றிடின் எவரருள் செய்யற் பாலினோர். | 73 |
1125 | சின்மய மாகிய செம்மல் சிம்புளாம் பொன்மலி சிறையுடைப் புள்ளின் நாயகன் வன்மைகொள் விலங்கினை மாற்ற வல்லது மின்மினி தனையடல் விசய மாகுமோ. | 74 |
1126 | ஒறுத்திடும் அவுணர்க ளொழிய வேரொடும் அறுத்தருள் உணர்விலா அளியர் உன்னடி மறுத்தலில் அன்பினர் மற்றின் னோர்பிழை பொறுத்தருள் கருணையாற் புணரி போன்றுவாய். | 75 |
1127 | பரமுற வணிகரைப் பரித்துப் பல்வளந் தருகலங் கவிழ்ந்திடச் சாய்த்து மற்றவர் ஒருதலை விளிதல்போல் உன்னிற் பெற்றிடுந் திருவினர் பொருதுனைச் செருவில் துஞ்சினார். | 76 |
1128 | தொழுதகு நின்னடித் தொண்ட ராற்றிய பிழையது கொள்ளலை பெரும சிந்தையுள் அழிதரு மினையவர் அறிவு பெற்றிவண் எழுவகை யருளென இறைஞ்சிக் கூறினான். | 77 |
1129 | பொன்னவன் இன்னன புகன்று வேண்டிட முன்னவர் முன்னவன் முறுவல் செய்துவான் மன்னவ னாதியர் மால்க ளிற்றொடும் அந்நிலை எழும்வகை அருள்செய் தானரோ. | 78 |
1130 | வேறு அந்தியின் வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே, இந்திரனும் மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச், சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக், கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும். | 79 |
1131 | கலங்கினர் இரங்கினர் கலுழ்ந்தனர் புலர்ந்தனர் கவன்ற னர்உளம், மலங்கினர் விடந்தனை அயின்றவ ரெனும்படி மயர்ந்த னலிசேர், உலங்கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரந்த னையிழந், திலங்கெழில் முகம்பொலி விகந்தனர் பொருந்தமை யிகழ்ந்த னர்களே. | 80 |
1132 | துஞ்சியெழும் அன்னவர்கள் ஏழுலகு முன்னுதவு சுந்த ரிதரும், மஞ்சனரு ளோடுவிளை யாடுவது காண்டலும் வணங்கி யனையான், செஞ்சரண் இரண்டினையு முச்சிகொடு மோயினர் சிறந்த லர்துணைக், கஞ்சமல ரிற்பல நிறங்கொள்அரி யின்தொகை கவைஇய தெனவே. | 81 |
1133 | கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை யுமைதன், மைந்தநம பன்னிரு யுத்தநம நீபமலர் மாலை புனையுந், தந்தைநம ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம், எந்தைநம என்றுமிளை யோய்நம குமாரநம என்றுதொழுதார். | 82 |
1134 | பொருந்துதலை யன்புடன் எழுந்தவர்கள் இவ்வகை புகழ்ந்து மனமேல், அரந்தைகொடு மெய்ந்நடு நடுங்குதலும் அன்னதை அறிந்து குமரன், வருந்தலிர் வருந்தலி ரெனக்கருணை செய்திடலும் மற்ற வர்கடாம், பெருந்துயரும் அச்சமு மகன்றுதொழு தேயினைய பேசி னர்களால். | 83 |
1135 | ஆயவமு தத்தினொடு நஞ்சளவி உண்குநரை அவ்வி டமலால், தூயவமு தோவுயிர் தொலைக்குமது போலுனது தொல்ல ருளினால், ஏயதிரு வெய்திட இருந்தனம்உன் னோடமரி யற்றி யதனால், நீயெமை முடித்தியலை அன்னதவ றெம்முயிரை நீக்கி யதரோ. | 84 |
1136 | பண்டுபர மன்றனை இகழ்ந்தவன் மகத்திலிடு பாக மதியாம், உண்டபவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்பொ ருதுநேர், கொண்டிகல் புரிந்தனம் அளப்பில்பவம் வந்தகும ரேச எமைநீ, தண்ட முறை செய்தவை தொலைத்தனை உளத்துடைய தண்ண ளியினால். | 85 |
1137 | ஆதலின் எமக்கடிகள் செய்தஅரு ளுக்குநிக ராற்று வதுதான், ஏதுளது மற்றெமை உனக்டிய ராகஇவ ணீது மெனினும், ஆதிபரமாகிய உனக்கடியம் யாம்புதி தளிப்ப தெவனோ, தாதையர் பெறச்சிறுவர் தங்களை அவர்ககருள்கை தக்க பரிசோ. | 86 |
1138 | அன்னதெனி னுந்தௌ¤வில் பேதையடி யேம்பிழை யனைத்தும் உளமேல், உன்னலை பொறுத்தியென வேகுமர வேள்அவவை யுணர்ந்து நமைநீர், முன்னமொரு சேயென நினைந்துபொரு தீர்நமது மொய்ம்பு முயர்வும், இன்னுமுண ரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தி னனரோ. | 87 |
1139 | எண்டிசையு மீரெழு திறத்துலகும் எண்கிரியு மேழு கடலுந், தேண்டிரையும் நேமிவரை யும்பிறவும் வேறுதிரி பாகி யுளசீர், அண்ட நிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளு மாகி அயனும், விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்கு மரனே. | 88 |
1140 | மண்ணளவு பாதலமெ லாஞ்சரணம் மாதிர வரைப்பும் மிகுதோள், விண்ணளவெ லாமுடிகள் பேரொளியெ லாம்நயனம் மெய்ந்த டுவெலாம், பண்ணளவு வேதமணி வாய்உணர்வெ லாஞ்செவிகள் பக்கம் அயன்மால், எண்ணளவு சிந்தை யுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈச னுயிரே. | 89 |
1141 | ஆனதொரு பேருருவு கொண்டுகும ரேசனுற அண்டர் பதியும், ஏனையரும் அற்புதமி தற்புதமி தென்றுதொழு தெல்ல வருமாய், வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும் வனப்பு முணரார், சானுவள வாஅரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றி னர்களால். | 90 |
1142 | வேறு சேணலம் வந்த சோதிச் சிற்பர முதல்வ எம்முன் மாணல முறநீ கொண்ட வான்பெருங் கோலந் தன்னைக் காணலம் அடியேங் காணக் காட்டிடல் வேண்டு மென்ன நீணலங் கொண்டு நின்ற நெடுந்தகை அதனைக் கேளா. | 91 |
1143 | கருணைசெய் தொளிகள் மிக்க கண்ணவர்க் கருளிச் செவ்வேள் அருணமார் பரிதிப் புத்தேள் அந்தகோ டிகள்சேர்ந் தென்னத் அருணவில் வீசி நின்ற தனதுரு முற்றுங் காட்ட இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் கண்டார். | 92 |
1144 | அடிமுதன் முடியின் காறும் அறுமகன் உருவ மெல்லாங் கடிதவ னருளால் நோக்கிக் கணிப்பிலா அண்ட முற்றும் முடிவறு முயிர்கள் யாவும் மூவருந் தேவர் யாரும் வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச் சொல்வார். | 93 |
1145 | அம்புவி முதலாம் பல்பே ரண்டமும் அங்கங் குள்ள உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலுஞ் செம்பது மத்தி னோனுஞ் சிவனொடுஞ் செறிதல் கண்டோம் எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா. | 94 |
1146 | அறிகிலம் இந்நாள் காறும் அகிலமும் நீயே யாகி ளுறைதரு தன்மை நீவந் துணர்த்தலின் உணர்ந்தா மன்றே பிறவொரு பொருளுங் காணேம் பெருமநின் வடிவ மன்றிச் சிறியம்யாம் உனது தோற்றந் தெரிந்திட வல்ல மோதான். | 95 |
1147 | முண்டகன் ஒருவன் துஞ்ச முராரிபே ருருவாய் நேமிக் கண்டுயில் அகந்தை நீங்கக் கண்ணுதற் பகவன் எல்லா அண்டமும் அணிப்பூ ணார மாகவே ஆங்கொர் மேனி கொண்டன னென்னுந் தன்மை குமரநின் வடிவிற் கண்டேம். | 96 |
1148 | நாரணன் மலரோன் பன்னாள் நாடவுந் தெரிவின் றாகிப் பேரழல் உருவாய் நின்ற பிரான்திரு வடிவே போலுன் சீருரு வுற்ற தம்மா தௌ¤கிலர் அவரும் எந்தை யாரருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்தி டாரோ. | 97 |
1149 | அரியொடு கமலத் தேவும் ஆடல்செய் தகிலந் தன்னோ டொருவரை யொருவர் நுங்கி உந்தியால் முகத்தால் நல்கி இருவரு மிகலு மெல்லை எடுத்தபே ருருநீ கொண்ட திருவுரு விதனுக் காற்றச் சிறியன போலு மன்றே. | 98 |
1150 | ஆகையால் எம்பி ரான்நீ அருவுரு வாகி நின்ற வேகநா யகனே யாகும் எமதுமா தவத்தால் எங்கள் சோகமா னவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை நாகமே லிருந்து மாற்றால் நண்ணினை குமர னேபோல். | 99 |
1151 | எவ்வுரு வினுக்கும் ஆங்கோ ரிடனதா யுற்ற உன்றன் செவ்வுரு வதனைக் கண்டு சிறந்தனம் அறம்பா வத்தின் அவ்வுரு வத்தின் துப்பும் அகலுதும் இன்னும் யாங்கள் வெவ்வுரு வதத்திற் செல்லேம் வீடுபே றடைது மன்றே. | 100 |
1152 | இனையன வழுத்திக் கூறி யிலங்கெழிற் குமர மூர்த்தி தனதுபே ருருவை நோக்கிச் சதமகன் முதலா வுள்ளோர் தினகரன் மலர்ச்சி கண்ட சில்லுணர் வுயிர்க ளென்ன மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார். | 101 |
1153 | எல்லையில் ஔ¤பெற் றன்றால் எந்தைநின் னுருவம் இன்னும் ஒல்லுவ தன்றால் காண ஔ¤யிழந் துலைந்த கண்கள் அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத் தொல்லையின் உருவங் கொண்டு தோன்றி யே அளித்தி யென்றார். | 102 |
1154 | என்றிவை புகன்று வேண்ட எம்பிரான் அருளால் வான்போய் நிற்னபே ருருவந் தன்னை நீத்தறு முகத்தோ னாகித் தொன்றுள வடிவத் தோடு தோன்றலுந் தொழுது போற்றிக் குன்றிருஞ் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூற லுற்றான். | 103 |
1155 | தொன்னிலை தவாது வைகுஞ் சூரனே முதலா வுள்ள ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் பாங்கர் மன்னிநின் றேவல் செய்ய வானுயர் துறக்கம் நண்ணி என்னர சியற்றி எந்தாய் இருத்திஎன் குறையீ தென்றான். | 104 |
1156 | இகமொடு பரமும் வீடும் ஏத்தினர்க குலப்பு றாமல் அகனம ரருளால் நல்கும் அறுமுகத் தவற்குத் தன்சீர் மகபதி யளிப்பான் சொற்ற வாசகம் சுடரொன் றங்கிப் பகவனுக் கொருவன் நல்கப் பராவிய போலு மாதோ. | 105 |
1157 | வானவர் கோனை நோக்கி வறிதுற நகைத்துச் செவ்வேள் நீநமக் களித்த தொல்சீர் நினக்குநாம் அளித்தும் நீவிர் சேனைக ளாக நாமே சேனையந் தலைவ னாகித் தானவர் கிளையை யெல்லாம் வீட்டுதும் தளரேல் என்றான். | 106 |
1158 | கோடலங் கண்ணி வேய்ந்த குமரவேள் இனைய கூற ஆடியல் கடவுள் வௌ¢ளை அடற்களிற் றண்ணல் கேளா வீடுற அவுண ரெல்லாம் வியன்முடி திருவி னோடுஞ் சூடின னென்னப் போற்றிச் சுரரோடு மகிழ்ச்சி கொண்டான். | 107 |
1159 | அறுமுகத் தேவை நோக்கி அமரர்கோன் இந்த வண்டத் துறைதரு வரைகள் நேமி உலகுயிர் பிறவும் நின்னால் முறைபிறழ்ந் தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை யெல்லாம் நிறுவுதி யென்ன லோடும் நகைத்திவை நிகழத்த லுற்றான். | 108 |
1160 | இன்னதோ ரண்டந் தன்னில் எம்மில்வே றுற்ற வெல்லாந் தொன்னெறி யாக என்றோர் தூமொழி குமரன் கூற முன்னுறு பெற்றித் தான முறையிறந் திருந்த தெல்லாம் அந்நிலை எவரும் நோக்கி அற்புத மடைந்து நின்றார். | 109 |
1161 | வேறு நிற்கு மெல்லையின் நிலத்திடை யாகிப் பொற்கெ னத்திகழ் பொருப்பிடை மேவுஞ் சிற்கு ணக்குரிசில் சேவடி தாழூஉச் சொற்க நாடுள சுரேசன் உரைப்பான். | 110 |
1162 | ஆண்ட கைப்பகவ ஆரண மெய்ந்நூல் பூண்ட நின்னடிகள் பூசனை யாற்ற வேண்டு கின்றும்வினை யேம்அது செய்ய ஈண்டு நின்னருளை ஈகுதி யென்றான். | 111 |
1163 | என்ன லுங்குகன் இசைந்து நடந்தே பொன்னி னாலுயர் பொருப்பினை நீங்கித் தன்ன தொண்கயிலை சார்ந்திடு ஞாங்கர் மன்னி நின்றதொரு மால்வரை புக்கான். | 112 |
1164 | குன்றி ருஞ்சிறை குறைத்தவன் ஏனோர் ஒன்றி யேதொழு துவப்புள மெய்தி என்றும் நல்லிளைய னாகிய எங்கோன் பின்றொ டர்ந்தனர் பிறங்கலில் வந்தார். | 113 |
1165 | சூரல் பம்புதுறு கல்முழை கொண்ட சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ ஆரும் விண்ணவர் அவன்கழல் தன்னைச் சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார். | 114 |
1166 | அந்த வேலையம ரர்க்கிறை தங்கண் முந்து கம்மியனை முன்னுற அன்னான் வந்து கைதொழலும் மந்திர மொன்று நந்த மாநகரின் நல்கிவ ணென்றான். | 115 |
1167 | அருக்கர் தந்தொகை அனைத்தையு மொன்றா உருக்கி யாற்றியென ஒண்மணி தன்னால் திருக்கி ளர்ந்துலவு செய்யதொர் கோயில் பொருக்கெ னப்புனைவர் கோன்புரி குற்றான். | 116 |
1168 | குடங்கர் போல்மகு டங்கெழு வுற்ற இடங்கொள் கோபுர விருக்கையின் நாப்பண் கடங்க லுழ்ந்திடு கரிக்குரு குண்ணும் மடங்கல் கொண்தொர் மணித்தவி சீந்தான். | 117 |
1169 | ஈந்த வெல்லைதனில் இந்திரன் ஏவப் போந்து வானெறி புகுந்திடு தூநீர் சாந்த மாமலர் தழற்புகை யாதி ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர். | 118 |
1170 | வேறு அன்ன காலையில் அண்டர்கள் மேலையோன் சென்னி யாறுடைத் தேவனை வந்தியா உன்ன தாளருச் சித்தியா முய்ந்திட இந்நி கேதனம் ஏகுதி நீயென்றான். | 110 |
1171 | கூற்ற மன்னதுட் கொண்டுவிண் ணொரெலாம் போற்ற மந்திரம் புக்கு நனந்தலை ஏற்ற ரித்தொகை ஏந்தெழிற் பீடமேல் வீற்றி ருந்தனன் வேதத்தின் மேலையோன். | 120 |
1172 | ஆன காலை அமரர்கள் வாசவன் ஞான நாயக நாங்கள் உனக்கொரு தானை யாகுந் தலைவனை நீயெனா வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினர். | 121 |
1173 | நொதுமல் பெற்றிடு நுண்டுகில் சூழ்ந்தனர் முதிய சந்த முதலமட் டித்தனர் கதிரும் நன்பொற் கலன்வகை சாத்தினர் மதும லர்த்தொகை மாலிகை சூட்டினர். | 122 |
1174 | ஐவ கைப்படும் ஆவியும்* பாளிதம் மெய்வி ளக்கமும் வேறுள பான்மையும் எவ்வெ வர்க்கும் இறைவற்கு நல்கியே செவ்வி தர்ச்சனை செய்தன ரென்பவே. ( * ஐவகைப்படும் ஆவி - நறுமணம் கமழும் பொருட்டு, கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்ற ஐவகை வாசனை பொருள்களைப் பொடித்து இடும் தூபம்.) | 123 |
1175 | புரந்த ரன்முதற் புங்கவர் தம்முளத் தரந்தை நீங்க அருச்சனை செய்துபின் பரிந்து தாழ்ந்து பரவலும் ஆயிடைக் கரந்து வள்ளல் கயிலையிற் போயினான். | 124 |
1176 | வெற்பின் மிக்குயர் வௌ¢ளியம் பொற்றையில் சிற்ப ரன்மறைந் தேகலுந் தேவரும் பொற்பின் மேதகு பொன்னகர் அண்ணலும் அற்பு தத்துடுன் அவ்வரை நீங்கினார். | 125 |
1177 | ஈசன் மைந்தன் இளையன் இமையவர் பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை மாசில் கந்த வரையென யாவரும் பேச ஆங்கொர் பெயரினைப் பெற்றதே. | 126 |
1178 | ஆன கந்த வடுக்கலைத் தீர்ந்துபோய் வான மன்னன் மனோவதி நண்ணினான் ஏனை வானவர் யாவரும் அவ்வவர் தான மெய்தனர் தொன்மையில் தங்கினார். | 127 |
1179 | உயவல் ஊர்திகொண் டொய்யென முன்னரே கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள் பயிலும் வீரரும் பாரிட மள்ளரும் அயலின் மேவர ஆயிடை வைகினான். | 128 |
ஆகத் திருவிருத்தம் - 1179
15. தகரேறு படலம் (1180 - 1204)
1180 | சூரன்முத லோருயிர் தொலைக்கவரு செவ்வேள் ஆருமகிழ் வௌ¢ளியச லத்தின் அமர் போழ்தின் மேருவி லுடைப்பரன் விரும்பஅகி லத்தே நாரதனொர் வேள்வியை நடாத்தியிட லுற்றான். | 1 |
1181 | மாமுனி வருஞ்சுரரும் மாநில வரைப்பில் தோமறு தவத்தினுயர் தொல்லை மறையோரும் ஏமமொடு சூழ்தர இயற்றிய மகத்தில் தீமிசை யெழுந்ததொரு செக்கர்புரை செச்சை. | 2 |
1182 | அங்கிதனில் வந்ததகர் ஆற்றுமகந் தன்னில் நங்களின மேபலவும் நாளுமடு கின்றார் இங்கிவரை யான்அடுவன் என்றிசைவ கொண்டே வெங்கனலை யேந்துபரி மீதெழுதல் போலும். | 3 |
1183 | மாருதமும் ஊழிதனில் வன்னியும் விசும்பில் பேருமுரும் ஏறுமொரு பேருருவு கொண்டே ஆருவது போல்விரைவும் அத்தொளியும் ஆர்ப்புஞ் சேரவெழும் மேடம்அடு செய்கைநினைந் தன்றே. | 4 |
1184 | கல்லென மணித்தொகை களத்தினிடை தூங்கச் சில்லரிபெய் கிங்கிணி சிலம்படி புலம்ப வல்லைவரு கின்றதகர் கண்டுமகத் துள்ளோர் எல்லவரும் அச்சமொ டிரிந்தனர்கள் அன்றே. | 5 |
1185 | இரிந்தவர்கள் யாவரையும் இப்புவியும் வானுந் துரந்துசிலர் வீழ்ந்துதொலை வாகநனி தாக்கிப் பரந்ததரை மால்வரை பராகமெழ ஓடித் திரிந்துயிர் வருந்தஅடல் செய்தது செயிர்த்தே. | 6 |
1186 | எட்டுள திசைக்கரி இரிந்தலறி யேங்கக் கிட்டியெதிர் தாக்குமதி கேழ்கிளரும் மானத் தட்டிரவி தேரொடு தகர்ந்துமுரி வாக முட்டும்அவர் தம்பரியை மொய்ம்பினொடு பாயும். | 7 |
1187 | இனையவகை யால்தகரி யாண்டுமுல வுற்றே சினமொடுயிர் கட்கிறுதி செய்துபெயர் காலை முனிவர்களும் நாரதனும் மொய்ம்புமிகு வானோர் அனைவர்களும் ஓடினர் அருங்கயிலை புக்கார். | 8 |
1188 | ஊறுபுக அன்னவர் உலைந்துகயி லைக்கண் ஏறிவரு காலையில் இலக்கமுட னொன்பான் வீறுதிறல் வீரரொடு மேவியுல வுற்றே ஆறுமுக வண்ணல்விளை யாடலது கண்டார். | 9 |
1189 | ஈசனிடை நண்ணுகிலம் ஈண்டுகும ரேசன் நேசமொடு நந்துயரம நீக்கவெதிர் வந்தான் ஆசிறுவன் அல்லன்இவன் அண்டர்பல ரோடும் வாசவனை வென்றுயிரை மாற்றியெழு வித்தான். | 10 |
1190 | எங்குறை முடித்திடல் இவற்கௌ¤து நாமிப் புங்கவனொ டுற்றது புகன்றிடுது மென்னாத் தங்களில் உணர்ந்துசுரர் தாபதர்கள் யாரும் அங்கவன்முன் ஏகினர் அருந்துதிகள் செய்தே.. | 11 |
1191 | வந்துபுகழ் வானவரும் மாமுனிவர் தாமுந் தந்திமுக வற்கிளவல் தன்னடி வணங்கக் கந்தனவர் கொண்டதுயர் கண்டுமிக நீவிர் நொந்தனிர் புகுந்தது நுவன்றிடுதி ரென்றான். . | 12 |
1192 | கேட்டிஇளை யோய்மறை கிளத்தும் ஒரு வேள்வி வேட்டனமி யாங்களது வேலையிடை தன்னில் மாட்டுகன லூடொரு மறித்தகர் எழுந்தே ஈட்டமுறும் எம்மையட எண்ணியதை யன்றே. . | 13 |
1193 | ஆடெழு கிளர்ச்சியை அறிந்துமகம் விட்டே ஓடியிவ ணுற்றனம் உருத்தது துரந்தே சாடியது சிற்சிலவர் தம்மையத னாலே வீடியத ளப்பிலுயிர் விண்ணினொடு மண்மேல். . | 14 |
1194 | நீலவிட மன்றிது நிறங்குலவு செக்கர்க் கோலவிட மேயுருவு கொண்டதய மேபோல் ஓலமிட எங்குமுல வுற்றதுயி ரெல்லாங் காலமுடி வெய்துமொரு கன்னல்முடி முன்னம். . | 15 |
1195 | சீற்றமொ டுயிர்க்கிறுதி செய்துலவு மேடத் தாற்றலை அடக்கியெம தச்சமும் அகற்றி ஏற்றகுறை வேள்வியையும் ஈறுபுரி வித்தே போற்றுதி யெனத்தொழுது போற்றிசெயும் வேலை. . | 16 |
1196 | எஞ்சுமவர் தம்மைஇளை யோன்பரிவின் நோக்கி அஞ்சல்விடு மின்களென அங்கைய தமைத்தே தஞ்சமென வேபரவு தன்பரிச னத்துள் மஞ்சுபெறு மேனிவிறல் வாகுவொடு சொல்வான். . | 17 |
1197 | மண்டுகனல் வந்திவர் மகந்தனை அழித்தே அண்டமொடு பாருலவி யாருயிர்க டம்மை உண்டுதிரி செச்சைதனை ஒல்லைகுறு குற்றே கொண்டணைதி என்றுமை குமாரனுரை செய்தான். . | 18 |
1198 | வேறு குன்றெழு கதிர்போல் மேனிக் குமரவேள் இனைய கூற மன்றலந் தடந்தோள் வீர வாகுவாந் தனிப்பேர் பெற்றான் நன்றென இசைந்து கந்தன் நாண்மலர்ப் பாதம் போற்றிச் சென்றனன் கயிலை நீங்கிச் சினத்தகர் தேட லுற்றான். | 19 |
1199 | மண்டல நேமி சூழும் மாநில முற்று நாடிக் கண்டில னாகிச் சென்றேழ் பிலத்தினுங் காண கில்லான் அண்டர்தம் பதங்கள் நாடி அயன்பதம் முன்ன தாகத் தண்டளிர்ச் செக்கர் மேனித் தகர்செலுந் தன்மை கண்டான். | 20 |
1200 | ஆடலந் தொழில்மேல் கொண்டே அனைவரும் இரியச் செல்லும் மேடமஞ் சுரவே ஆர்த்து விரைந்துபோய் வீர வாகு கோடவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை நண்ணி ஏடுறு நீபத் தண்டார் இளையவன் முன்னர் உய்த்தான். | 21 |
1201 | உய்த்தனன் வணங்கி நிற்ப உளமகிழ்ந்த தருளித் தேவர் மெய்த்தவர் தொகையை நோக்கி ஏழகம் மேவிற் றெம்பால் எய்த்தினி வருந்து கில்லீர் யாருநீர் புவனி யேகி முத்தழல் கொடுமுன் செய்த வேள்வியை முடித்தி ரென்றான். | 22 |
1202 | ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னோர் கார்தரு கண்டத் தெந்தை காதல வேள்வித் தீயிற் சேர்தரு தகரின் ஏற்றைச் சிறியரேம் உய்யு மாற்றால் ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டு மென்றார். | 23 |
1203 | என்னலுந் தகரை அற்றே யானமாக் கொள்வம் பார்மேல் முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும் நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும் அன்னதோர் குமர னெந்தை அடிபணிந் தருளாற் போந்தார். | 24 |
1204 | நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன் புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி அவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட் டமல மூர்த்தி உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தி யாக. | 25 |
ஆகத் திருவிருத்தம் - 1204
16. அயனைச் சிறைபுரி படலம் (1205 - 1223)
1205 | மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள் ஆடல்செய் துலாவிவௌ¢ளி யசலமீதில் அமர்தரும் நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர் நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார். | 1 |
1206 | நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன் எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார் மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும் அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன் தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில். | 2 |
1207 | ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந் தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல் இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான். | 3 |
1208 | அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும் புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே பங்கயாச னத்தினோன் பணின்திடாது தொழுதலும். | 4 |
1209 | ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும் ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன் நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன். | 5 |
1210 | வேறு முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித் தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில் சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப் பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். | 6 |
1211 | ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள் செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான் உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன். | 7 |
1212 | என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம் ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான் நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால். | 8 |
1213 | தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில் காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும் ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான். | 9 |
1214 | முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன் நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில மிகைத்த கண்களை விழித்தனன் வௌ¢கினன் விக்கித் திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே. | 10 |
1215 | ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும் வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். | 11 |
1216 | தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப் பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன் அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால் மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார். | 12 |
1217 | தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும் ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான் மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால் நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. | 13 |
1218 | எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய் சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள் குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க. | 14 |
1219 | மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல் உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச் சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில். | 15 |
1220 | அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருஞ் சிறையில் வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன் எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப் பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். | 16 |
1221 | ஒருக ரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன் கரத லந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள் வரத மோடப யந்தரப் பரம்பொருள் மகனோர் திருமு கங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். | 17 |
1222 | உயிரி னுக்குயி ராகியே பரஞ்சுட ரொளியாய் வியன்ம றைத்தொகைக் கீறதாய் விதிமுத லுரைக்குஞ் செயலி * னுக்கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேள் அயனெ னப்படைக் கின்றதும் அற்புத மாமோ. ( * விதிமுதல் உரைக்கும் செயல் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்ற ஐந்து தொழில்கள்.) | 18 |
1223 | தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான் அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர் உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார். | 19 |
ஆகத் திருவிருத்தம் - 1223
17. அயனைச் சிறை நீக்கு படலம் (1224 - 1265)
1224 | ஆல மாமிடற் றண்ணல்சேய் இத்திறம் அளப்பில் காலம் யாவையும் அளித்தனன் இருத்தலுங் கரியோன் நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச் சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான். | 1 |
1225 | சீத ரத்தனிப் பண்ணவன் சிந்தனை தேறி ஆத பத்தினர் பரிமுகர் வசுக்கள்அன் னையர்கள் கூத மற்றிடும் விஞ்சையர் உவணரோ டியக்கர் மாதி ரத்தவர் யாவரும் விரைந்துடன் வந்தார். | 2 |
1226 | மதியும் ஏனைய கோள்களுங் கணங்களும் வான்றோய் பொதிய மேயவ னாதியாம் பொவில்மா தவரும் விதிபு ரிந்திடு பிரமரொன் பதின்மரும் வியன்பார் அதனை ஏந்திய சேடனும் உரகரும் அடைந்தார். | 3 |
1227 | இன்ன தன்மையில் அமரரும் முனிவரு மெய்த அன்னர் தம்மொடுஞ் செங்கண்மால் கயிலையை அடைந்து முன்னர் வைகிய நந்திகள் முறையினுய்த் திடப்போய்த் தன்னை யேதனக் கொப்பவன் பொற்கழல் தாழ்ந்தான். | 4 |
1228 | பொற்றி ருப்பதம் இறைஞ்சியே மறைமுறை போற்றி நிற்ற லுஞ்சிவ னருள்கொடே நோக்குறீஇ நீவிர் எற்றை வைகலு மில்லதோர் தளர்வொடும் எம்பால் உற்ற தென்கொலோ என்றலும் மாலிவை உரைப்பான். | 5 |
1229 | வேறு இறைவ நின்மகன் ஈண்டுறு போதனை மறைமு தற்பத வான்பொருள் கெட்டடலும் அறிகி லானுற அன்னவன் றன்னைமுன் சிறைபு ரிந்தனன் சிட்டியுஞ் செய்கின்றான். | 6 |
1230 | கந்த வேளெனக் கஞ்சனும் ஐயநின் மைந்த னாம்அவன் வல்வினை யூழினால் அந்த மிபகல் ஆழ்சிறைப் பட்டுளம் நொந்து வாடினன் நோவுழந் தானரோ. | 7 |
1231 | ஆக்க மற்ற அயன்றன் சிறையினை நீக்கு கென்று நிமலனை வேண்டலுந் தேக்கும் அன்பிற் சிலாதன்நற் செம்மலை நோக்கி யொன்று நுவலுதல் மேயினான். | 8 |
1232 | குடுவைச் செங்கையி னானைக் குமரவேள் இடுவித் தான்சிறை என்றனர் ஆண்டுநீ கடிதிற் சென்றுநங் கட்டுரை கூறியே விடுவித் தேயிவண் மீள்கெனச் சாற்றினான். | 9 |
1233 | எந்தை யன்ன திசைத்தலும் நன்றெனா நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்துபோய் அந்த மற்ற அடற்கணஞ் சூழ்தரக் கந்த வெற்பிற் கடிநகர் எய்தினான். | 10 |
1234 | எறுழு டைத்தனி ஏற்று முகத்தினான் அறுமு கத்தன் அமர்ந்த நிகேதனங் குறுகி மற்றவன் கோல மலர்ப்பதம் முறைத னிப்ணிந் தேத்தி மொழிகுவான். | 11 |
1235 | கடிகொள் பங்கயன் காப்பினை எம்பிரான் விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கெனைத் தடைப டாதவன் றன்சிறை நீக்குதி குடிலை யன்னவன் கூறற் கௌ¤யதோ. | 12 |
1236 | என்னு முன்னம் இளையவன் சீறியே அன்ன வூர்தி யருஞ்சிறை நீக்கலன் நின்னை யுஞ்சிறை வீட்டுவன் நிற்றியேல் உன்னி யேகுதி ஒல்லையி லென்றலும். | 13 |
1237 | வேற தொன்றும் விளம்பிலன் அஞ்சியே ஆறு மாமுகத் தண்ணலை வந்தியா மாறி லாவௌ¢ளி மால்வரை சென்றனன் ஏறு போல்முக மெய்திய நந்தியே. | 14 |
1238 | மைதி கழ்ந்த மணிமிடற் றண்ணல்முன் வெய்தெ னச்சென்று மேவி அவன்பதங் கைதொ ழூஉநின்று கந்தன் மொழிந்திடுஞ் செய்தி செப்பச் சிறுநகை யெய்தினான். | 15 |
1239 | கெழுத கைச்சுடர்க் கேசரிப் பீடமேல் விழுமி துற்ற விமலன் விரைந்தெழீஇ அழகு டைத்தன தாலயம் நீங்கியே மழவி டைத்தனி மால்வரை ஏறினான். | 16 |
1240 | முன்னர் வந்த முகில்வரை வண்ணனுங் கின்ன ரம்பயில் கேசர ராதியோர் நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர் என்ன ருந்தொழு தெந்தையின் ஏகினார். | 17 |
1241 | படைகொள் கையினர் பன்னிறக் காழக உடையர் தீயி னுருகெழு சென்னியர் இடிகொள் சொல்லினர் எண்ணரும் பூதர்கள் புடையில் ஈண்டினர் போற்றுதல் மேயினார். | 18 |
1242 | இனைய காலை யினையவர் தம்மொடும் வனிதை பாதியன் மால்விடை யூர்ந்துராய்ப் புனித வௌ¢ளியம் பொற்றை தணந்துபோய்த் தனது மைந்தன் தடவரை யெய்தினான். | 19 |
1243 | சாற்ற ருந்திறற் சண்முக வெம்பிரான் வீற்றி ருந்த வியனகர் முன்னுறா ஏற்றி னின்றும் இழிந்துவிண் ணோரெலாம் போற்ற முக்கட் புனிதனுட் போயினான். | 20 |
1244 | அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன் கந்தன் முன்னர்க் கருணையொ டேகலும் எந்தை வந்தனன் என்றெழுந் தாங்கவன் வந்து நேர்கொண்ட டடிகள் வணங்கியே. | 21 |
1245 | பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை இருத்தி நாதனை ஏழுல கீன்றிடும் ஒருத்தி மைந்தன் உயிர்க்குயி ராகிய கருத்த நீவந்த காரியம் யாதென்றான். | 22 |
1246 | மட்டு லாவு மலர்அய னைச்சிறை இட்டு வைத்தனை யாமது நீக்குவான் சுட்டி வந்தன மாற்சுரர் தம்முடன் விட்டி டையவென் றெந்தை விளம்பினான். | 23 |
1247 | நாட்ட மூன்றுடை நாயகன் இவ்வகை ஈட்டு மன்பொ டிசைத்திடும் இன்சொலைக் கேட்ட காலையிற் கேழ்கிளர் சென்னிமேற் சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான். | 24 |
1248 | உறுதி யாகிய ஓரெழுத் தின்பயன் அறிகி லாதவன் ஆவிகள் வைகலும் பெறுவ னென்பது பேதைமை ஆங்கவன் மறைகள் வல்லது மற்றது போலுமால். | 25 |
1249 | அழகி தையநின் னாரருள் வேதமுன் மொழிய நின்ற முதலெழுத் தோர்கிலான் இழிவில் பூசை இயற்றலும் நல்கிய தொழில்பு ரிந்து சுமத்தினை யோர்பரம். | 26 |
1250 | ஆவி முற்றும் அகிலமும் நல்கியே மேவு கின்ற வியன்செயல் கோடலால் தாவில் கஞ்சத் தவிசுறை நான்முகன் ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும். | 27 |
1251 | நின்னை வந்தனை செய்யினும் நித்தலுந் தன்ன கந்தை தவிர்கிலன் ஆதலால் அன்ன வன்றன் அருஞ்சிறை நீக்கலன் என்ன மைந்தன் இயம்பிய வேலையே. | 28 |
1252 | வேறு மைந்தநின் செய்கை யென்னே மலரயன் சிறைவி டென்று நந்திநம் பணியா லேகி நவின்றதுங் கொள்ளாய் நாமும் வந்துரைத் திடினுங் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தா யென்னாக் கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல். | 29 |
1253 | அத்தன தியல்பு நோக்கி அறுமுகத் தமலன் ஐய சித்தமிங் கிதுவே யாகில் திசைமுகத் தொருவன் தன்னை உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவ னென்னாப் பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான். | 30 |
1254 | நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்கத் தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி முன்சிறை யொன்றிற் செங்கேழ் முண்டகத் தயனை வைத்த வன்சிறை நீக்கி நம்முன் வல்லைதந் திடுதி ரென்றான். | 31 |
1255 | என்றலுஞ் சார தர்க்குட் சிலவர்க ளெகி யங்கண் ஒன்றொரு பூழை தன்னுள் ஒடுங்கின னுறையும் வேதா வன்றளை விடுத்தல் செய்து மற்றவன் றனைக்கொண்ட டேகிக் குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் முன்னர் உய்த்தார். | 32 |
1256 | உய்த்தலுங் கமலத் தண்ணல் ஒண்கரம் பற்றிச் செவ்வேள் அத்தன்முன் விடுத்த லோடும் ஆங்கவன் பரமன் றன்னை மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து வௌ¢கினன் நிற்ப நோக்கி எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை யெய்தி யென்றான். | 33 |
1257 | நாதனித் தன்மை கூறி நல்லருள் புரித லோடும் போதினன் ஐய உன்றன் புதல்வன்ஆற் றியவித் தண்டம் ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித் தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனித மென்றான். | 34 |
1258 | அப்பொழு தயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ முப்புவ னத்தின் மேவும் முழுதுயிர்த் தொகைக்கும் ஏற்ற துப்புற வதனை நன்று தூக்கினை தொன்மை யேபோல் இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை யிருத்தி யென்றான். | 35 |
1259 | அருளுரு வாகும் ஈசன் அயற்கிது புகன்ற பின்னர் முருகவேள் முகத்தை நோக்கி முறுவல்செய் தருளை நல்கி வருதியால் ஐய என்று மலர்க்கையுய்த் தவனைப் பற்றித் திருமணிக் குறங்கின் மீது சிறந்துவீற் றிருப்பச் செய்தான். | 36 |
1260 | காமரு குமரன் சென்னி கதுமென உயிர்த்துச் செக்கர்த் தாமரை புரையுங் கையால் தழுவியே அயனுந் தேற்றா ஓமென உரைக்குஞ் சொல்லின் உறுபொரு ளுனக்குப் போமோ போமெனில் அதனை யின்னே புகலென இறைவன் சொற்றான். | 37 |
1261 | முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம் பெற்றிடும் அவட்கு நீமுன் பிறருண ராத வாற்றால் சொற்றதோ ரினைய மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப இற்றென வியம்ப லாமோ மறையினால் இசைப்ப தல்லால். | 38 |
1262 | என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னாத் தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும் ஒன்றொரு பதத்தி னுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா நன்றருள் புரிந்தா னென்ப ஞானநா யகனாம் அண்ணல். | 39 |
1263 | அன்னதோர் ஐய மாற்றி அகமகிழ் வெய்தி அங்கண் தன்னிளங் குமரன் றன்னைத் தலைமையோ டிருப்ப நல்கி என்னையா ளுடைய நாதன் யாவரும் போற்றிச் செல்லத் தொன்னிலை யமைந்து போந்து தொல்பெருங் கயிலை வந்தான். | 40 |
1264 | முன்புறும் அயன்மால் தேவர் முனிவரை விடுத்து முன்னோன் தன்பெருங் கோயில் புக்கான் தாவில்சீர்க் கந்த வெற்பில் பொன்புனை தவிசின் ஏறிப் புடைதனில் வயவர் போற்ற இன்பொடு குமர மூர்த்தி இனிதுவீற் றிருந்தா னன்றே. | 41 |
1265 | ஆங்குறு குமரப் புத்தேள் அருமறைக் காதி யாகி ஓங்குமெப் பொருட்கு மேலாம் ஓரெழுத் துரையின் உண்மை தீங்கற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக் குதவி மற்றும் பாங்குறும் இறைவன் நூலும் பரிவினால் உணர்த்தி னானால். | 42 |
ஆகத் திருவிருத்தம் - 1265
18. விடைபெறு படலம் (1266 -1310 )
1266 | எல்லை அன்னதின் மாலருள் கன்னியர் இருவர் சொல்ல ரும்பெரு வனப்பினர் சுந்தரி அமுத வல்லி என்றிடும் பெயரினர் கந்தவேள் வரைத்தோள் புல்லும் ஆசையால் சரவணத் தருதவம் புரிந்தார். | 1 |
1267 | என்னை யாளுடை மூவிரு முகத்தவன் இரண்டு கன்னி மாருமாய் ஒன்றிநோற் றிடுவது கருத்தில் உன்னி யேயெழீஇக் கந்தமால் வரையினை யொருவி அன்னை தோன்றிய இமகிரிச் சாரலை யடைந்தான். | 2 |
1268 | பொருவில் சீருடை இமையமால் வரைக்கொரு புடையாஞ் சரவ ணந்தனிற் போதலுந் தவம்புரி மடவார் இருவ ரும்பெரி தஞ்சியே பணிந்துநின் றேத்த வரம ளிப்பதென் கூறுதிர் என்றனன் வள்ளல். | 3 |
1269 | மங்கை மார்கொழு தெம்மைநீ வதுவையால் மருவ இங்கி யாந்தவம் புரிந்தனங் கருணைசெய் யென்ன அங்கவ் வாசகங் கேட்டலும் ஆறுமா முகத்துத் துங்க நாயகன் அவர்தமை நோக்கியே சொல்வான். | 4 |
1270 | முந்தும் இன்னமு தக்கொடி மூவுல கேத்தும் இந்தி ரன்மக ளாகியே வளர்ந்தனை இருத்தி சுந்த ரிப்பெயர் இளையவள் தொல்புவி தன்னில் அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர்பால் அமர்தி. | 5 |
1271 | நன்று நீவிர்கள் வளர்ந்திடு காலையாம் நண்ணி மன்றல் நீமையால் உங்களை மேவுதும் மனத்தில் ஒன்றும் எண்ணலீர் செல்லுமென் றெம்பிரான் உரைப்ப நின்ற கன்னியர் கைதொழு தேகினர் நெறியால். | 6 |
1272 | ஏகு மெல்லையில் அமுதமா மென்கொடி யென்பாள் பாக சாதனன் முன்னமோர் கு£வியாய்ப் படர்ந்து மாக மன்னநின் னுடன்வரும் உபேந்திரன் மகள்யான் ஆகை யால்எனைப் போற்றுதி தந்தையென் றடைந்தாள். | 7 |
1273 | பொன்னின் மேருவில் இருந்தவன் புல்வியை நோக்கி என்னை யீன்றயாய் இங்ஙனம் வருகென இசைத்துத் தன்ன தாகிய தனிப்பெருங் களிற்றினைத் தனது முன்ன ராகவே விளித்தனன் இத்திறம் மொழிவான். | 8 |
1274 | இந்த மங்கைநந் திருமக ளாகுமீங் கிவளைப் புந்தி யன்பொடு போற்றுதி இனையவள் பொருட்டால் அந்த மில்சிறப் பெய்துமே லென்றலும் அவளைக் கந்த மேற்கொடு நன்றெனப் போயது களிறு. | 9 |
1275 | கொவ்வை போலிதழ்க் கன்னியை மனோவதி கொடுபோய் அவ்வி யானையே போற்றிய தனையகா ரணத்தால் தெய்வ யானைஎன் றொருபெயர் எய்தியே சிறிது நொவ்வு றாதுவீற் றிருந்தனள் குமரனை நுவன்றே. | 10 |
1276 | பெருமை பொண்டிடு தெண்டிரைப் பாற்கடல் பெற்றுத் திரும டந்தையை அன்புடன் வளர்த்திடும் திறம்போல் பொருவில் சீருடைஅடல் அயிராவதம் போற்ற வரிசை தன்னுடன் இருந்தனள் தெய்வத மடந்தை. | 11 |
1277 | முற்று ணர்ந்திடு சுந்தரி யென்பவள் முருகன் சொற்ற தன்மையை உளங்கொடு தொண்டைநன் னாட்டில் உற்ற வள்ளியஞ் சிலம்பினை நோக்கியாங் குறையும் நற்ற வச்சிவ முனிமக ளாகவே நடந்தாள். | 12 |
1278 | இந்த வண்ணம்இவ் விருவர்க்கும் வரந்தனை ஈந்து கந்த மால்வரை யேகியே கருணையோ டிருந்தான் தந்தை யில்லதோர் தலைவனைத் தாதையாய்ப் பெற்று முந்து பற்பகல் உலகெலாம் படைத்ததோர் முதல்வன். | 13 |
1279 | வேறு இத்திறஞ் சிலபக லிருந்து பன்னிரு கைத்தல முடையவன் கயிலை மேலுறை அத்தனொ டன்னைதன் னடிப ணிந்திடச் சித்தம துன்னினன் அருளின் செய்கையால். | 14 |
1280 | எள்ளருந் தவிசினின் றிழிந்து வீரராய் உள்ளுறும் பரிசனர் ஒருங்கு சென்றிடக் கொள்ளையஞ் சாரதர் குழாமும் பாற்பட வள்ளலங் கொருவியே வல்லை யேகினான். | 15 |
1281 | ஏயென வௌ¢ளிவெற் பெய்தி யாங்ஙனங் கோயிலின் அவைக்களங் குறுகிக் கந்தவேள் தாயொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே ஆயவர் நடுவுற அருளின் வைகினான். | 16 |
1282 | அண்ணணங் குமரவேள் அங்கண் வைகலும் விண்ணவர் மகபதி மேலை நாண்முதல் உண்ணிகழ் தங்குறை யுரைந்து நான்முகன் கண்ணனை முன்கொடு கயிலை யெய்தினார். | 17 |
1283 | அடைதரும் அவர்தமை அமலன் ஆலயம் நடைமுறை போற்றிடும் நந்தி நின்மெனத் தடைவினை புரிதலுந் தளர்ந்து பற்பகல் நெடிதுறு துயரொடு நிற்றல் மேயினார். | 18 |
1284 | அளவறு பற்பகல் அங்கண் நின்றுளார் வளனுறு சிலாதனன் மதலை முன்புதம் உளமலி இன்னலை யுரைத்துப் போற்றலுந் தளர்வினி விடுமின்என் றிதனைச் சாற்றினான். | 19 |
1285 | தங்குறை நெடும்புனற் சடில மேன்மதி யங்குறை வைத்திடும் ஆதி முன்புபோய் நுங்குறை புகன்றவன் நொய்தின் உய்ப்பனால் இங்குறை வீரென இயம்பிப் போயினான். | 20 |
1286 | போயினன் நந்தியம் புனிதன் கண்ணுதற் றூயனை வணங்கினன் தொழுது வாசவன் மாயவன் நான்முகன் வானு ளோரெலாங் கோயிலின் முதற்கடை குறுகினா ரென்றான். | 21 |
1287 | அருளுடை யெம்பிரான் அனையர் யாரையுந் தருதிநம் முன்னரே சார வென்றலும் விரைவொடு மீண்டனன் மேலை யோர்களை வருகென அருளினன் மாசில் காட்சியான். | 22 |
1288 | விடைமுகன் உரைத்தசொல் வினவி யாவருங் கடிதினி லேகியே கருணை வாரிதி அடிமுறை வணங்கினர் அதற்குள் வாசவன் இடருறு மனத்தினன் இனைய கூறுவான். | 23 |
1289 | பரிந்துல கருள்புரி பரையொ டொன்றியே இருந்தருள் முதல்வகேள் எண்ணி லாஉகம் அருந்திறற் சூர்முதல் அவுணர் தங்களால் வருந்தின மொடுங்கினம் வன்மை இன்றியே. | 24 |
1290 | அந்தமில் அழகுடை அரம்பை மாதரும் மைந்தனும் அளப்பிலா வானு ளோர்களும் வெந்தொழில் அவுணர்கள் வேந்தன் மேவிய சிந்துவின் நகரிடைச் சிறைக்கண் வைகினார். | 25 |
1291 | இழிந்திடும் அவுணரா லியாதொர் காலமும் ஒழிந்திட லின்றியே உறைந்த சீரொடும் அழிந்ததென் கடிநகர் அதனை யானிவண் மொழிந்திடல் வேண்டுமோ உணர்தி முற்றுநீ. | 26 |
1292 | முன்னுற யான்தவம் முயன்று செய்துழித் துன்னினை நங்கணோர் தோன்ற லெய்துவான் அன்னவ னைக்கொடே அவுணர்ச் செற்றுநும் இன்னலை யகற்றுதும் என்றி எந்தைநீ. | 27 |
1293 | அப்படிக் குமரனும் அவத ரித்துளன் இப்பகல் காறுமெம் மின்னல் தீர்த்திலை முப்புவ னந்தொழு முதல்வ தீயரேந் துப்புறு பவப்பயன் தொலைந்த தில்லையோ. | 28 |
1294 | சூருடை வன்மையைத் தொலைக்கத் தக்கதோர் பேருடை யாரிலை பின்னை யானினி யாரொடு கூறுவன் ஆரை நோகுவன் நீருடை முடியினோய் நினது முன்னலால். | 29 |
1295 | சீகர மறிகடற் சென்று நவ்விசேர் காகம தென்னஉன் கயிலை யன்றியே ஏகவோர் இடமிலை எமக்கு நீயலால் சோகம தகற்றிடுந் துணைவர் இல்லையே. | 30 |
1296 | ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாந் தோற்றிய வெவ்விட மெனினுந் துய்க்கலாம் மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர் ஆற்றரி தாற்றரி தலம்இப் புன்மையே. | 31 |
1297 | தீதினை யகற்றவுந் திருவை நல்கவுந் தாதையர் அல்லது தனயர்க் காருளர் ஆதலின் எமையினி அளித்தி யாலென ஓதினன் வணங்கினன் உம்பர் வேந்தனே. | 32 |
1298 | அப்பொழு தரியயன் ஐய வெய்யசூர் துப்புடன் உலகுயிர்த் தொகையை வாட்டுதல் செப்பரி தின்னினிச் சிற்துந் தாழ்க்கலை இப்பொழு தருள்கென இயம்பி வேண்டினார். | 33 |
1299 | இகபரம் உதவுவோன் இவற்றைக் கேட்டலும் மிகவருள் எய்தியே விடுமின் நீர்இனி அகமெலி வுறலென அருளி ஆங்கமர் குகன்முகன் நோக்கியே இனைய கூறுவான். | 34 |
1300 | வேறு பாரினை யலைத்துப் பல்லுயிர் தமக்கும் பருவரல் செய்துவிண் ணவர்தம், ஊரினை முருக்கித் தீமையே இயற்றி யுலப்புறா வன்மை கொண் டுற்ற, சூரனை யவுணர் குழுவொடுந் தடிந்து சுருதியின் நெறி நிறீஇ மகவான், பேரர சளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்தியென் றனன்எந்தை பெருமான். | 35 |
1301 | அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப், புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர், உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய், இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். | 36 |
1302 | பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள், நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள், வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம், வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில். | 37 |
1303 | ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ, தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம், மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும், நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான். | 38 |
1304 | அன்னதற் பின்னர் எம்பிரான் றன்பா லாகிநின் றேவின புரிந்து, மன்னிய இலக்கத் தொன்பது வகைத்தா மைந்தரை நோக்கியே எவர்க்கும், முன்னவ னாம்இக் குமரனோ டேகி முடிக்குதிர் அவுணரை யென்னாத், துன்னுபல் படையும் உதவியே சேய்க்குத் துணைப் படை யாகவே கொடுத்தான். | 39 |
1305 | நாயகன் அதற்பின் அண்டவா பரணன் நந்தியுக் கிரனொடு சண்டன், காயெரி விழியன் சிங்கனே முதலாங் கணப்பெருந் தலைவரை நோக்கி, ஆயிர விரட்டி பூதவௌ¢ ளத்தோ டறுமுகன் சேலையாய்ச் சென்மின், நீயிரென் றருளி அவர்தமைக் குகற்கு நெடும்படைத் தலைவரா அளித்தான். | 40 |
1306 | ஐம்பெரும் பூத வன்மையும் அங்கண் அமர்தரும் பொருள்களின் வலியுஞ், செம்பது மத்தோ னாதியாம் அமரர் திண்மையுங் கொண்டதோர் செழுந்தேர், வெம்பரி இலக்கம் பூண்டது மனத்தின் விரைந்து முன் செல்வதொன் றதனை, எம்பெரு முதல்வன் சிந்தையா லுதவி யேறுவான் மைந்தனுக் களித்தான். | 41 |
1307 | இவ்வகை யெல்லாம் வரைவுடன் உதவி யேகுதி நீயெனக் குமரன், மைவிழி உமையோ டிறைவனைத் தொழுது வலங்கொடே மும்முறை வணங்கிச், செவ்விதின் எழுந்து புகழ்ந்தனன் நிற்பத் திருவுளத் துவகையால் தழுவிக், கைவரு கவானுய்த் துச்சிமேல் உயிர்த்துக் கருணைசெய் தமலைகைக் கொடுத்தான். | 42 |
1308 | கொடுத்தலும் வயின்வைத் தருளினாற் புல்லிக் குமரவேள் சென்னிமோந் துன்பால், அடுத்திடும் இலக்கத் தொன்பது வகையோர் அனிகமாய்ச் சூழ்ந்திடப் போந்து, கடக்கரும் ஆற்றல் அவுணர்தங் கிளையைக் காதியிக் கடவுளர் குறையை, முடித்தனை வருதி என்றருள் புரிந்தாள் மூவிரு சமயத்தின் முதல்வி. | 43 |
1309 | அம்மையித் திறத்தால் அருள்புரிந் திடலும் அறுமுகன் தொழுதெழீஇ யனையோர், தம்விடை கொண்டு படர்ந்தனன் தானைத் தலைவராம் இலக்கமே லொன்பான், மெயம்மைகொள் வீரர்யாவருங் கணங்கள் வியன்பெருந் தலைவரும் இருவர், செம்மல ரடிகள் மும்முறை இறைஞ்சிச் சேரவே விடைகொடு சென்றார். | 44 |
1310 | நின்றிடும் அயன்மால் மகபதி எந்தாய் நீயெமை அளித்தனை நெஞ்சத், தொறாரு குறையும் இல்லையால் இந்நாள் உய்ந்தனம் உய்ந்தன மென்று, பொன்றிகழ் மேனி உமையுடன் இறைவன் பொன்னடி பணிந்தெழ நுமக்கு, நன்றிசெய் குமரன் தன்னுடன் நீரும் நடமெனா விடையது புரிந்தான். | 45 |
ஆகத் திருவிருத்தம் - 1310
19. படையெழு படலம் (1311 - 1328)
1311 | கண்ணுதல் விடைபெற் றரியயன் மகவான் கடவுளர் தம்மொடு கடிதின், அண்ணலங் குமரன் தன்னொடு சென்றே அயல்வரும் மருத்தினை நோக்கித், தண்ணளி புரியும் அறுமுகத் தெந்தை தனிபருந் தேர்மிசை நீபோய்ப், பண்ணொடு முட்கோல் மத்திகை பரித்துப் பாகனாய்த் தூண்டெனப் பணித்தான். | 1 |
1312 | மன்புரி திருமால் இனையன பணிப்ப மாருதன் இசைந்துவான் செல்லும், பொன்பொலி தேரின் மீமிசைப் பாய்ந்து பொருக்கென மருத்துவர் நாற்பான், ஒன்பது திறத்தார் புடைவரத் தூண்டி உவகையோ டறுமுகத் தொருவன், முன்புற வுய்த்துத் தொழுது மற்றிதன்மேல் முருகநீ வருகென மொழிந்தான். | 2 |
1313 | மாருதன் இனைய புகன்றுகை தொழலும் மற்றவன் செயற் கையை நோக்கிப், பேரருள் புரிந்து கதிரிளம் பரிதி பிறங்குசீர் உதயமால் வரைமேல், சேருவ தென்னக் குமரவேள் அனைய செழுமணி இரதமேற் செல்லச், சூரினி இறந்தான் என்றுவா சவனுஞ் சுரர்களும் ஆர்த்தனர் துள்ளி. | 3 |
1314 | வேறு ஓங்கு தேர்மிசைக் குமரவேள் மேவலும் உவப்பால் ஆங்க வன்றன தருள்பெறுந் திறலினோர் அணுகிப் பாங்கர் நண்ணினர் முனிவருந் தேவர்கள் பலரும் நீங்க லின்றியே அவர்புடை சூழ்ந்தனர் நெறியால். | 4 |
1315 | இனந்த னோடவர் முருகனை அடைதலும் இருநீர் புனைந்த சென்னியன் கயிலையில் இருந்தவெம் பூதர் அனந்த வௌ¢ளத்தில் இராயிர மாகும்வௌ¢ ளத்தர் வனைந்த வார்கழற் றலைவர்தம் முரைகொடு வந்தார். | 5 |
1316 | எழுவி யன்கரை நேமிவெஞ் சூலம்வாள் எறிவேல் மழுமு தற்படை யாவையும் ஏந்திய வலியோர் நிழன்ம திப்பிறை ஞெலிந்தென* நிலாவுமிழ் எயிற்றர் அழலு குத்திடும்** விழியினர் அசனியின் அறைவார். ( * ஞெலிந்தன. ** அழலுருத்திடும்.) | 6 |
1317 | நெடியர் சிந்தினர் குறியினர் ஐம்பெரு நிறனும் வடிவில் வீற்றுவீற் றெய்தினர் வார்சடைக் கற்றை முடியர் குஞ்சியர் பலவத னத்தரோர் முகத்தர் கொடிய ரென்னினும் அடைந்தவர்க் கருள்புரி குணத்தோர். | 7 |
1318 | நீறு கண்டிகை புனைதரும் யாக்கையர் நெடுநஞ் சேறு கண்டனை அன்றிமற் றெவரையும் எண்ணார் மாறு கொண்டவர் உயிர்ப்பலி நு குவோர் மறலி வீறு கொண்டதொல் படைதனைப் படுத்திடு மேலோர். | 8 |
1319 | அண்டம் யாவையும் ஆண்டுறை உயிர்த்தொகை யனைத்தும் உண்டு மிழ்ந்திட வல்லவர் அன்றியும் உதரச் சண்ட அங்கியா லடுபவர் அட்டவை தம்மைப் பண்டு போற்சிவன் அருளினால் வல்லையிற் படைப்போர். | 9 |
1320 | முன்னை வைகலின் இறந்திடும் இந்திரன் முதலோர் சென்னி மாலைகந் தரத்தினில் உரத்தினில் சிரத்தில் கன்ன மீதினில் கரத்தினில் மருங்கினில் கழலில் பொன்னின் மாமணிக் கலனொடும் விரவினர் புனைவார். | 10 |
1321 | இந்த வண்ணமாஞ் சாரதப் படையினர் ஈண்டித் தந்தம் வெஞ்சமர்த் தலைவர்க ளோடுசண் முகன்பால் வந்து கைதொழு தேத்தியே இறுதி சேர்வைகல் அந்த மில்புனல் அண்டம துடைந்தென ஆர்த்தார். | 11 |
1322 | ஆர்த்த சாரதர் எந்தைபா லாயினர் அதுகால் பேர்த்தும் ஆயவர் இடித்தெனப் பூதரில் பெரியோர் வார்த்த யங்கிய தண்ணுமை திமிலைவான் படகஞ் சீர்த்த காகள முதலிய இயம்பினர் சிலரே. | 12 |
1323 | ஆன காலையில் அதுதெரிந் தறுமுகத் தொருவன் வான ளாவிய புணரிகள் சூழ்ந்திட வயங்கும் பானு நாயகன் வந்தெனப் பரந்துபா ரிடத்துச் சேனை சூழ்தரக் கயிலைநீத் தவனிமேற் சென்றான். | 13 |
1324 | கொள்ளை* வெஞ்சினச் சாரதர் இராயிரங் குணித்த வௌ¢ளம் வந்திடக் கந்தவேள் அவனிமேல் மேவக் கள்ள வான்படை அவுணர்கள் கலந்துசூழ்ந் தென்னப் பொள்ளெ னத்துகள் எழுந்தது வளைந்தது புவியை. ( * கொள்ளை - மிகுதி.) | 14 |
1325 | எழுத ருந்துகள் மாதிர வரைப்பெலாம் ஏகி ஒழியும் வான்பதஞ் சென்றதால் ஆங்கவை யுறுதல் குழுவின் மல்கிய சாரதர் ஆர்ப்புமுன் குறுகி மொழிதல் போன்றன விண்ணுளோர் இமைப்பில்கண் மூட. | 15 |
1326 | கழிய டைத்திடு நேமிகள் பலவொடு ககன வழிய டைத்திடு பூமியும் ஒலியும்மன் னுயிர்கள் விழிய டைத்தன நாசியை யடைத்தன விளம்பு மொழிய டைத்தன அடைத்தன கேள்வியின் மூலம்**. ( ** கேள்வியின் மூலம் - கேட்டற்கேதுவாயுள்ள செவி.) | 16 |
1327 | பேரி டங்களாந் தனுவுடைப் பூதர்கள் பெயரப் பாரி டங்கள்தாம் இடம்பெறா ஆதலிற் பல்லோர் காரி டங்கொளும் வான்வழிச் சென்றனர் கண்டோர் ஓரி டங்களும் வௌ¢ளிடை இலதென வுரைப்ப. | 17 |
1328 | அவனி வானெலாம் பூழியால் மறைத்தலும் அதனைச் சி¢வன்ம கன்றன தொளியினால் அகற்றினன் செல்வான் கவன வாம்பரி இரதமேற் பனிபடுங் காலைத் தவன நாயகன் *** அதுதடிந் தேகுதன் மையைப் போல். ( *** தவனநாயகன் - சூரியன்.) | 18 |
0 comments:
Post a Comment