செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்
திருக்கைலாசப் படலம் (353-374)
|
|
|
|
|
|
353 | பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள்
ஈசன் நல்கு மியல்பென வெய்தினோ£
தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி
வீசு கின்றது வௌ¢ளியங் குன்றமே. | 1 |
354 | ஆறு சூடிய வாதியம் பண்ணவன்
ஏறு மூரிவௌ¢ ளேறுமக் கண்ணுதல்
நீறு சேர்தரு கோலமும் நித்தனைத்
தேறும் அன்ர்தஞ் சிந்தையும் போன்றதே. | 2 |
355 | மோன நன்னிலை முற்றிய பெற்றியர்
ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய்
ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத்
தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே. | 3 |
356 | கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத்
தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை
வான யாறு வருதலின் மாசிலா
ஞான நாயகன் போல நணியதே. | 4 |
357 | தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப்
பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல்
கண்ணு தற்குமொர் காமரு பீடமாய்
நண்ணு கின்றது போலும் நலத்ததே. | 5 |
358 | பொதியு மின்னமு தோடு பொருந்துவ
கதிரின் மிக்க கறையறு காட்சிய
மதிய மாயிர கோடி மணந்துதாம்
உதய மானது போன்றதன் வொண்கிரி. | 6 |
359 | நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர்
பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப்
பற்று நந்தி பரிவொடு காப்பது. | 7 |
360 | புரந்த ரன்முத லாகிய புங்கவர்
வரம்பின் மாதவர் மாசறு காட்சியர்
நிரந்த பூத கணவர் நிரந்தரம்
பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை. | 8 |
361 | மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர்
கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை
மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர்
இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது. | 9 |
362 | வேறு
கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச்
சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று
மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத்
தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம். | 10 |
363 | மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள்
பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து
கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல்
கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. | 11 |
364 | நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர்
குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும்
அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும்
வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே. | 12 |
365 | ஏற்றம் மேருவே யாதியாம வரைகள்ஏழ் வகையால்
சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி*
நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண்
வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு.
( * ஏழ்வையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்டல் முதலிய
ஏழுகடல்கள்.
ஆழியங்கிரி - சக்கரவாளகிரி. பெருஞ்சலதி - பெரும்புறக்கடல். ) | 13 |
366 | படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்
அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்
நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்
வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. | 14 |
367 | வேறு
அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட
நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக்
கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப்
பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே. | 15 |
368 | திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர்
மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்
பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி
அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும். | 16 |
369 | என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற்
பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந்
துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ
மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே. | 17 |
370 | வேறு
சோதி சேருமத் தூமணி மண்டபத்
தாதி யான அரியணை யும்பரிற்
காத லாகுங் கவுரி*யொர் பாங்குற
வேத நாயகன் வீற்றிருந் தானரோ.
( *அருளே சிவசத்தி என்பது தோன்ற, ‘காதலாகுங் கவுரி’ என்றார்.) | 18 |
371 | பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்
தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ்
நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்
பாடு கின்றனர் பாணியின் பாற்பட. | 19 |
372 | அதிகன்** வேணியி லார்தரு கங்கையை
விதிவு ரந்தரன் விண்டுல கத்துள
நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய்
கதியி னோர்கள் கவரிகள் வீசினார்.
( **அதிகன் - தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன் சிவபெருமான். ) | 20 |
373 | சீல வட்ட முடிப்பிறை தேடுவான்
ஞால வட்டத் தெழுதரு நாகர்போல்
ஏல வட்ட முகத்தரு கெங்கணும்
ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர். | 21 |
374 | ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப்
பாத தாமரை சூடியப் பண்ணவன்
கோதி லாத திருவுருக் கொண்டுளோர்
பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
0 comments:
Post a Comment