திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Saturday, October 16, 2010

காமதகனப் படலம் (492 - 601)

492 இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி
முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன்
ஐந்திற னாகிய ஆசுக வில்வேள்
வந்திடு மாறு மனத்தில் நினைந்தான்.
1
493 நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன்
முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள்
மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன்
இனந்தரு சூழலொ டிம்மென வந்தான்
2
494 மாமறை யண்ணல்முன் வந்து பராவித்
தாமரை நேர்தரு தாடொழு தென்னை
நீமன மீது நினைந்ததெ னென்னாக்
காமன் வினாவ அயன்கழ றுற்றான்.
3
495 கங்கை மிலைச்சிய கணணுதல் வெற்பின்
மங்கயை மேவநின் வாளிக மூவி
அங்குறை மோனம் அகற்றினை யின்னே
னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான்.
4
496 வேதனில் வாறு விளம்பிய கூற்றாங்
தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன்
காதிடை யேநெறி யார்ககடி திற்போய்
ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே.
5
497 கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங்
கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ்
சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய்
அட்டிடு கின்றதும் அற்புத மாமோ.
6
498 இத்திற மாமல ரேந்தல் இயம்பக்
கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே
பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ்
சித்தச வேளுரை செய்தன னம்மா.
7
499 ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற்
கேட்டன னென்று கிலேசம தாகி
வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப்
பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான்.
8
500 வேறு
வன்கண் ணருமா சறுகாட் சியர்பால்
நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார்
உன்கண் ணுறின் இத் தவறோ தினையால்
என்கண் ணடிகட் கிலையோ அருளே.
9
501 வன்னப் புலிமங் கையைமா மலர்மேற்
பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான்
கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய்
தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ.
10
502 வௌ¢ளைக் கமலத் தியைமெய் யுறவுந்
தௌ¢ளுற் றணிசெய் ததிலோத் தமைபால்
உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான்
பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ.
11
503 சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால்
மார்பிற் குடியா யுறவைத் திலனோ
கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன்
ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ.
12
504 தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய்
பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால்
விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும
கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ.
13
505 விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த்
திசையுற் றவராங் கொருசே யிழைபோல்
இசையற் றிடுபா கனிடைப் புணரா
வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ.
14
506 கதனத் தொடுவந் துகலந் தவர்பால்
இதநட் புறுமா மதியென் கணையால்
மதனத் தொடுதே சிகன்மா தையுறாப்
புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ.
15
507 முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால்
கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு
நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங்
குற்றே வல்செயும் படிகூட் டிலனோ.
16
508 மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக்
குறிதா முனியத் திரிகோ தமன்நல்
அறிவால் உயர்கா சிபனா தியராந்
துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ.
17
509 மன்னான் மரபுற் றிடுமா னவரைப்
பின்னா கியமும் மைகொள்பே தகரை
மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ
என்னா ணைகடந் தவர்யா ருளரே.
18
510 அறைபெற் றிடுமித் திறமா னவெலாம்
முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ
பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம்
மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே.
19
511 மாமே முதலா கியவா னவர்தம்
பாலே அடல்வா கைபடைப் பதலால்
மேலே நதிசூ டியமே லவன்மேற்
கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ.
20
512 ஐதா கியசீர் கொடவன் முறைசெய்
நொய்தா னவர்போ லநுவன் றனையால்
வெய்தா மழலா கியமே லவன்மேல்
எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ.
21
513 கையுந் நகையுங் கதிரார் விழியும்
மெய்யுந் தழலாம் விமலன் றனையான்
எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண்
டுய்யுந் திறமும் உளதோ உரையாய்.
22
514 பற்றோ டிகலற் றபரம் பொருளை
எற்றோ மயல்செய் குவதீ சனையும்
மற்றோ ரெனநின் னின்மதித் தனையால்
சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே.
23
515 சூறா வளிவை கியசூ ழலின்வாய்
ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல்
நீறா டியமெய் யுடைநின் மலன்மேல்
வீறாய் வினையேன் பொரமே வுவனே.
24
516 ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன்
மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம்
ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்
டீறுற் றனரல் லதிருந் துளர்யார்.
25
517 இந்நா ரணணா தியர்யா வர்களும்
அந்நா ளமலன் பணியாற் றிடலும்
அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால்
ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ.
26
518 எந்தாய் அருளென் றொரிளங் குமரன்
வந்தா தியையேத் தலும்வை துசினக்
கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை
அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ.
27
519 முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப்
பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம்
என்னச் சினெய் தியிகழந் தவுனைச்
சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ.
28
520 அடன்மே வுசலந் தரனா தியராய்ப
படிமே லுளதோர் ப·றா னவர்தாம்
முடிவார் அரனோ டுமுரண் டிடலுங்
கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ.
29
521 வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத்
தூடெய்தினர்யா வருமொப் பில்அரன்
மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப்
பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ.
30
522 அண்டா தவகந் தையொடா ழியின்வாய்
விண்டா னவரச் சுறமே வுவிடம்
உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற்
கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ.
31
523 தரியா வுளமாற் கொடுதன் னிகழும்
அரியோ டுகைம்மா வையடற் புலியை
உரியா மிசைபோல் வையுடுக் கையெனப்
பரியா அரனுற் றதுபார்த் திலையோ.
32
524 ஓரார் தனதுண் மையையுள் ளமிசை
யாரா யினுமாற் றவகந் தைபெறின்
வாரா அவர்தம் வலிமாற் றிடுமால்
தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே.
33
525 இறுகின் றகடைப் பகலீ றிலதோர்
கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ
பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ
அறிகின் றிலையோ அகிலங் களுமே.
34
526 இப்பெற் றியனா கியவீ சனையென்
கைப்பற் றியவிற் கொடுகந் தமலர்
அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல்
மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே.
35
527 மேனா ளகிலந் தரமெல் லியலா
ஆனா வருடன் னையளித் தொருபால்
தானா கவிருத் தியதற் பரனை
நானா மயல்செய் வதுநன் றிதுவே.
36
528 வேறு
என்னா மதவேள் இசையா மறுத்திடலும்
பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த
மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ
துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான்.
37
529 வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால்
அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால்
உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும்
எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ.
38
530 அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம்
இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம்
முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ
முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண்.
39
531 எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே
அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும்
நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற்
செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே.
40
532 செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள
எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ
அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே
நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ.
41
533 பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும்
ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன்
நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ
ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ.
42
534 கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி
எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா
ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண்
மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம்.
43
535 ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத்
தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும்
ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத்
தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ.
44
536 என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந்
தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை
சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும்
பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே.
45
537 ஏவ ரெனினும் இடருற் றனராகி
ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற்
காவி விடினும் அறனே மறுத்துளரேற்
பாவம் அலது பழியும் ஒழியாதே.
46
538 உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி
செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல்
வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை
பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே.
47
539 அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப்
பொன்£ டருளும் புலவோ ரிறையிரப்ப
வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித்
தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ.
48
540 மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும்
மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த
ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த
சீலந் தனைநீ சிறிதுந் தௌ¤ந்லையோ.
49
541 தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந்
தாக்கும் பொழுது தளரே லெனவுரையா
ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக்
காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ.
50
542 ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப்
பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல்
தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை
பாரார் புகழே பயனென்று கொள்வாரே.
51
543 சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம்
ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித்
தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான்
ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே.
52
544 ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச்
சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார்
ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற்
போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான்.
53
545 வேறு
பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும்
ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம்
புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே
இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன்.
54
546 என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா
நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால்
அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம்
துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன்.
55
547 வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட்
டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச்
செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே
வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான்.
56
548 கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச்
சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற்
காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய்
மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே.
57
549 செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத்
திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்
கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல்
உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான்.
58
550 பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத்
துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத்
தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா
உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான்.
59
551 ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான்
தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே
ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன்
மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான்.
60
552 நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ
அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே
ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன்
பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான்.
61
553 கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில்
இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே
தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர்
வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ.
62
554 கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங்
காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ்
சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன
மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே.
63
555 பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல்
இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை
அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே
பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான்.
64
556 கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக்
கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன்
பயிலும் வில்லும் வாளி யும்ப £த்து வல்லி யத்தினைத்
துயிலு ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான்.
65
557 கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல்
கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ
மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும்
ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான்.
66
558 பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண்
விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச்
சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன்
அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ.
67
559 கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால்
தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா
உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல்
வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே.
68
560 நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள்
கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத்
தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்
முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான்.
69
561 விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச்
செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும்
இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம்
மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான்.
70
562 வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்
ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும்
போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள்
சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான்.
71
563 புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே
தொன்மை போவெ ழுப்பு மாறு கருதி சோற்ற வாறுபோல்
மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன்
பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம்.
72
564 ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென்
றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம்
போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர்
ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான்.
73
565 நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள்
எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும்
அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண்
வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென.
74
566 இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர்
புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல்
தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல்
மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன்.
75
567 என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ
நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச்
சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற்
குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான்.
76
568 வேறு
ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்
குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா
வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப்
பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான்.
77
569 எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி
விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி
மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற
தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே.
78
570 அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்
துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி
கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற
நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான்.
79
571 முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே
நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும்
உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே
இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய முண்டோ.
80
572 எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங்
கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக்
கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை
அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே.
81
573 தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன் தனித்த தீபம்
போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர்
வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான்
நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம்.
82
574 ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப்
பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே
ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார்
தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே.
83
575 ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென்
தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும்
வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன்
பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான்.
84
576 இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட
தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி
மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப்
புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான்.
85
577 மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய
ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக்
காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான்
போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான்.
86
578 சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக்
கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப்
பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி
மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார்.
87
579 எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங்
குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு
நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா
நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான்.
88
580 விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது
பட்டலுஞ சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங்
கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற்
கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே.
89
581 ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண்
ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின்
மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின்
வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா.
90
582 செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல்
உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா
இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா
அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான்.
( பா-ம் - * அ¨நிதார்க் )
91
583 நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன்
கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால்
அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித்
துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும்.
92
584 இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி
வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன்
தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த
முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான்.
93
585 ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற
நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற
அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன்
புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார்.
94
586 வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான்
வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான
தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி
மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன்.
95
587 கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ்
சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை
அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம்
எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ.
96
588 பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங்
கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர்
ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி
வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள்.
97
589 சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல்
வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும்
இரதிசில் பொழுகிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால்
வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள்.
98
590 செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா,
சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா,
அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே,
உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ.
99
591 முன்னானிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று,
சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே,
உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ,
என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ.
100
592 மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும்,
நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக,
ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங்,
கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான்.
101
593 உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த,
செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா,
இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால்,
வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ.
102
594 வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர்,
எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய்,
கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே,
பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம் முயிர்போகும் பொருட்டே யன்றோ.
103
595 என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ,
முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ,
கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ,
வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ.
104
596 பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன்,
மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன் மார்பின் மேன்மை காணேன்,
கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன்,
என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே.
105
597 அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப்
பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை,
எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில்,
மன்னாவோ எனைத்தனியே விடடேகல் வழக்கோ சொல்லாய்.
106
598 போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை,
வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார்,
ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ,
வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ.
107
599 நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த,
மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய்,
ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே,
தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ.
108
600 தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி,
எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல,
வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக்,
கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே.
109
601 மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப்,
பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே,
எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே,
வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள்.

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design