திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Wednesday, September 29, 2010

திருமூலர் அருளியது அநுக்கிரகம்

13.. .(1).அருளல்
.(1). அநுக்கிரகம்

.441..
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி .(1).அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே
.(1). அவிழ்க்கின்ற

.442..
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே

.443..
.(1).குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
.(1).குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
.(2).குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
.(3).அசைவில் உலகம் அதுயிது வாமே
.(1). குயவன்
.(2). குயவனைப்
.(3). அயைவில்

.444..
விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே

.445..
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே

.446..
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே

.447..
.(1).ஆதி படைத்தனன் ஐம்பெரும் .(2).பூதம்
.(1).ஆதி படைத்தனன் .(3).ஆசில்பல் ஊழி
.(1).ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
.(1).ஆதி படைத்தவை தாங்கிநின் றானே
.(1). அனாதி
.(2). பூதங்கள்
.(3). ஆயபல் ஊழிகள்

.448..
அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
.(1). கடலிடம்
.(2). சீவரும்

.449..
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே
.(1). மாபோதகமே

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design